சிவகார்த்திகேயனின் ரெமோவில் ஸ்ரீதிவ்யா வந்தது எப்படி?
சென்ட்டிமென்ட் யாரை விட்டது? சிவகார்த்திகேயனின் வெற்றிகளில் ஆரம்பகால பங்கு அதிகம் யாருக்கு என்றால், அதில் பலருக்கும் இடம் உண்டு. ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு மட்டும் தனி இடம் உண்டு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது. அதற்கப்புறம் காக்கிசட்டை படத்திலும் இந்த ஜோடி ஒன்று சேர்ந்தது. அந்த படமும் வெற்றி மேல் வெற்றி.
விடுவார்களா ஸ்ரீதிவ்யாவை?. ஒரு ஷாட்டிலாவது அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று பிரியப்பட்டாராம் சிவகார்த்திகேயன். தற்போது அவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வரும் பிரமாண்டத் தயாரிப்பான ‘ரெமோ’ படத்தில் ஒரு காட்சியில் வந்து போகிறாராம் ஸ்ரீதிவ்யா.
அவர் அழைப்பாரா என்று இவர் காத்திருக்க, சின்ன ரோல்தான் பரவால்லையா என்று அவர் கேட்க, ஒரே பாசப்போராட்டம். எப்படியோ…. உள்ளே வந்தது பச்சைக்கிளி.
கீர்த்தி சுரேஷின் வரவுக்கு பிறகுதான் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டில் பலத்த சேதாரம். இந்த நிலையில் உன் படத்திலேயே உனக்கு தெரியாமல் நான் ஒரு கேரக்டர்ல உள்ள வந்துட்டேன் பாரு என்று உணர்த்துவதற்காக நடித்திருப்பாரோ ஸ்ரீதிவ்யா? இருந்தாலும் இருக்கும்!