நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லீங்க, நீங்க வேற..! பிரஸ் வாயை அடைத்த ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுற்றி சுற்றிப்பறக்கிற ஒற்றை குருவி, எவ்வித டென்ஷனும் இல்லாமல் மிக மிக தாமதமாக வந்து சேர்ந்தது. ஒரு சின்ன ‘ஸாரி…’ கூட சொல்லாமல் அமர்ந்து கொண்டாலும், வந்தது ஸ்ருதிஹாசனாச்சே! பொறுத்துக் கொண்டது பிரஸ். பூஜை படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த மெத்தனம். இதற்காகதான் காத்திருந்தாயா பாலகுமாரா ரேஞ்சுக்கு சும்மா ரவுண்டு கட்டி அடித்தார்கள் அவரை.

‘நீங்க சரிகாவை ஃபாலோ பண்றீங்களா, கமல்ஹாசனை ஃபாலோ பண்றீங்களா? ஏன்னா வளர்ந்ததெல்லாம் சரிகாவிடம்ங்கறதால உங்க பாணியும் அப்படியே இருக்கே’ என்ற கேள்விதான் முதலில் ஸ்ருதியை உசுப்பியது. தெலுங்குல ரொம்ப கவர்ச்சியா நடிக்கிறீங்களே என்ற இன்னொரு கேள்வியும் சேர்ந்து கொள்ள, சற்றே உஷ்ணமானார் கமல் புத்திரி. ‘கவர்ச்சிக்கு நான் ஒரு ஸ்கேல் வச்சுருக்கேன். ஒரு நடிகை கிளாமர் பண்ணணும்னு அவசியம் இருந்தா பண்ணிதானே ஆகணும்’ என்றார். (பக்கத்திலிருந்த சத்யராஜ் சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்தது தனி சுவாரஸ்யம். ஏனென்றால் ஸ்ருதி மேடைக்கு வருவதற்கு சற்று முன்புதான் நடிகைகள், கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் கொடுக்கிற விளக்கம் பற்றி கமென்ட் அடித்து ஓய்ந்திருந்தார் அவர். அது புரியாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் ஸ்ருதி)

அப்படியே மெல்ல அந்த கேள்வியை வீசி பஞ்சாயத்தை துவங்கினார் இன்னொரு நிருபர். கல்யாணத்திற்கு முன்னாடி குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லியிருக்கீங்களே…?

படக்கென்று உஷரான ஸ்ருதி, ஏங்க… நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லீங்க, நீங்க வேற..! என்று ஒரு வரியில் பஞ்சாயத்தை முடித்துவிட்டு அடுத்த கேள்விக்கு தாவினார்.

கயிறை பிடிக்கிற சாமர்த்தியம் இருப்பவர்களால்தான் காளையை அவிழ்த்துவிட முடியும். அது ஸ்ருதிக்கு கொஞ்சம் ஓவராகவே இருப்பதுதான் ஸ்பெஷல்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதுக்குதான் பாலாவும் ஷங்கரும் இருக்காங்களே…? நழுவல்ஸ் ஹரி!

‘இந்த படத்திற்கு விருதே கொடுக்கலாம்’ என்று பத்திரிகைகள் பாராட்டினால், ‘போச்சுரா... நம்ம பொழப்புக்கே குழிய வெட்டிட்டானுங்களே’ என்று கவலைப்படுவார்களாம் சினிமாக்காரர்கள். ஏனென்றால் விருதுக்கு தகுதியான படம் என்றால்,...

Close