அஜீத் சார் ஏன்தான் இப்படி இருக்காரோ? நடிகர் விவேக் வியப்பு

விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதற்கப்புறம் கால இடைவெளிகள், சின்ன சின்ன நெருடல்கள் என்று இவரை அவரும், அவரை இவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. என்ன ஆச்சர்யம்? தான் இயக்கும் படத்தில் விவேக்கையும் நடிக்க வைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் விரும்ப, சந்தோஷமாக ‘யெஸ்’ சொன்னார் அஜீத்.

சமீபத்தில் ‘சிக்கிம்’ மாநிலத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள் இருவரும். விமானத்தில் பக்கத்து பக்கத்து சீட். நிறைய பேசினார்கள். மனம் விட்டு பேசினார்கள். ‘இப்பதான் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு புரிஞ்சுக்க முடியுது’ என்று கூறிய அஜீத், விவேக் எதிர்பாராத நேரத்தில் அந்த அதிர்ச்சியை தந்தாராம். தன் கையில் அவர் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தை கழற்றி அப்படியே விவேக் கையில் கட்டிவிட்டாராம். ‘இனி உங்களுக்கு நல்ல நேரம்தான்’ என்று அவர் கூற, நெகிழ்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் விவேக்.

இதுவரைக்கும் கூட ஓ.கே. இருவரும் ஒரு காலத்தில் நண்பர்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ டைப்பான சென்ட்டிமென்ட் அது. ஆனால் சிக்கிமில் இறங்கி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே காரில் சென்று கொண்டிருந்தார்களாம் இருவரும். காரை ஓட்டிய டிரைவர், தனக்கு வரும் போன் அழைப்புகளை மிகவும் சிரமப்பட்டு அட்டர்ன் பண்ணிக் கொண்டிருந்தாராம். ஏனென்றால் அவ்வளவு பாடாவதியான போன் அது. விவேக்கிடம் பேசிக் கொண்டே ஒரு கண்ணால் அதையும் கவனித்து வந்த அஜீத், வண்டி டவுன்ஷிப் ஒன்றை கடக்கும் போது காரை நிறுத்த சொன்னாராம். கீழே இறங்கியவர் திரும்பி வரும்போது கையில் விலை உயர்ந்த ஐ போன்.

டிரைவரின் பழைய போனை வாங்கி, அதிலிருந்த சிம் கார்ட்டை இதில் மாட்டிக் கொடுத்துவிட்டு, இனிமே இந்த போனை யூஸ் பண்ணுங்க என்று கூறினாராம். அவ்வளவுதான் அந்த டிரைவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. விவேக்குக்கு அதைவிட அதிர்ச்சி. இப்படி கார் ஓட்டும்போது ஹெட் போன் போட்டுக்கங்க. அதுதான் நல்லது என்று கூறி ஹெட் போனையும் அந்த டிரைவருக்கு மாட்டிவிட்டால் அதிர்ச்சி வராதா என்ன?

சென்னை திரும்பிய விவேக், தன்னை சந்திக்கிற நிருபர்களிடம் இந்த சம்பவத்தை சொல்லிக் கொண்டேயிருக்கிறார். ‘இந்த அஜீத் சார் ஏன்தான் இப்படி இருக்காரோ?’ என்று விவேக் சொல்ல சொல்ல, நிருபர்களுக்கும் வியப்பு. நல்ல விஷயத்தை செல்போன் டவர் வேகத்தில் நாட்டுக்கு சொல்லிவிட வேண்டும் அல்லவா?

சொல்லியாச்….!

2 Comments
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    அந்து பேபி,

    அஜீத் கிட்ட உனக்குள்ள பாசம் தெரிஞ்சதுதான். அதுக்காக இப்படி ரீல் ஓட்டறதா?

    சிம்ம கழட்டிட்டு போனக் குடுத்தாரே. அதில் இருந்த கான்டாக்ட்ஸ், விடியோ, ஆப்ஸ் எல்லாத்தையும் டிரைவருக்கு குடுத்துட்டாரா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில்...

Close