பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு – தோழன் இயக்கம்
“Stepup2stayup” என்ற பிரச்சாரம் மூலம் பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வை “தோழன்” இயக்கம் இன்னபிற இயக்கங்களுடன் சேர்ந்து நடத்துகிறது. இதன் பகுதியாக சென்னையில் மொத்தம் 67 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடப்பதின் துவக்க நிகழ்ச்சி இன்று தி. நகர் பேருந்து நிலையத்தில் நடக்கிறது. இந்த எண்ணிக்கை நமது 67-வது குடியரசு தின வாரத்தை குறிக்கிறது.
தோழன்அமைப்பு2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று சென்னையில் மட்டும் 2000 தன்னர்வலர்களுடன் இயங்கி வருகிறது. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, இரத்த, கண் மற்றும் உறுப்பு தானம், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பேருந்துகளில் படியில் பயணம் செய்வது சாலை விபத்துகள் நடக்க முக்கிய காரணமாக உள்ளது. படியில் பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். மேலும் படியில் பயணம் செய்வதால் விபத்தில் இறப்பவர்களில் 90 சதவீதத்தினரின் வயது 16 முதல் 24 வரை உள்ளதாக ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரம் உள்ளது. நமது அக்கறையின்மையால் நாம் இளைய சமுதாயத்தின் உயிரை இழப்பதை அனுமதிக்க முடியாது.
இதை தடுக்க நம் தன்னார்வலர்கள் பேருந்து நிறுத்தங்களில் பிரச்சார துண்டு பிரசுரங்களை விநியோகிப்பார்கள். மேலும் பேருந்து நிலையங்களில் உள்ள பயணிகளிடம் படியில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைப்பர்.
தோழன் அமைப்பு “விபத்தில்லா தேசம்” மூலம் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தொடர்ந்து படியில் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதி ஏற்றுள்ளோம்.