ஐஸ்வர்யாராய் படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்!

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ராஜீவ் மேனன். அவரே இயக்கிய ‘மின்சார கனவு’ இப்பவும் யூத் ஏரியாவில் ரசிக்கும்படியான படம்! அரவிந்த்சாமி, காஜோல், பிரபுதேவா மூவர் கூட்டணியுடன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த அப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. அதற்கப்புறம் படம் இயக்கச் சொல்லி அவருக்கு வந்த அழைப்புகளை அவரே மறுத்து வந்தார். அதற்கான காரணத்தை அவர் சொல்லாமல் தள்ளி தள்ளி வைத்தாலும், ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ கதைதான் இது.

யெஸ்… விரைவில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் ராஜீவ் மேனன். இந்த படம் பிரபல கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியம்மாளின் வாழ்க்கை வரலாறாம். எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கப் போகிறார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யராய். இந்த படம் தொடர்பான செய்திகள் வெளியே கசிய ஆரம்பித்தவுடன், எம்.எஸ் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் பலரும், ‘இது சரியல்ல….’ ராஜீவ் மேனனை எச்சரிக்க, விறுவிறு துவக்கம் மந்தகதிக்கு ஆளானது.

இருந்தாலும் அந்த படத்தின் வேர் இன்னும் பசுமையாகவே இருப்பதை போல, சில விஷயங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்றுதான் இது.

இந்த படத்திற்கு பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்தான் இசையமைக்கிறாராம். இரண்டு பாடல்களை ரெக்கார்டிங்கே செய்து முடித்துவிட்டதாக தகவல் பரவிக்கிடக்கிறது கோடம்பாக்கத்தில். சுதாரகுநாதன் ஏற்கனவே பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் நடித்தும் இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எப்ப டி.ஐ வொர்க் முடிஞ்சு… எப்ப படம் தியேட்டருக்கு வந்து…? ஐ தரும் அலுப்பு

ஐ - எப்போது திரைக்கு வரும்? இந்த கேள்விக்கு விடை அப்படத்தின் இயக்குனர் ஷங்கருக்கே தெரியாது போலிருக்கிறது. ‘போன தீபாவளிக்கே வந்திருக்க வேண்டிய படம். ஆனால் தயாரிப்பாளரின்...

Close