சுசீந்திரனை கழற்றிவிட்டார் உதயநிதி! மறுபடியும் முதல்லேர்ந்தா…?
சுசீந்திரனும் நல்ல டைரக்டர்தான். உதயநிதியும் நல்ல நடிகர்தான். ஆனால் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஒத்துப்போகலையே? இதனால் பலமான கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, மக்கள் நலக்கூட்டணியை விடவும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
மனிதன் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் இயக்கும் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார் உதயநிதி. மனிதன் பட கலெக்ஷன் எப்படியோ? ஆனால் அப்படத்தின் மூலம் உதயநிதியை முழு நடிகராக ஏற்றுக் கொண்டுவிட்டது தமிழகம். அந்த படத்தில் அவர் கொடுத்திருந்த பர்பாமென்ஸ் அவரை அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு போகும் என்றெல்லாம் நம்பியது நாடு. ஆனால் உள்ளே புகுந்த சுசீந்திரன், என்ன மாதிரியான கதையை சொன்னாரோ? அதை கேட்ட நாளிலிருந்தே கெட்ட சொப்பனத்திற்கு ஆளானது போலாகிவிட்டார் உதயநிதி.
இன்னும் திருப்தியா… இன்னும் திருப்தியா… என்று அவர் கேட்டுக் கொண்டேயிருக்க, சுசீந்திரனின் ஈகோ துணியை கிழித்துக் கொண்டு ஆடியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவரும், அல்லது இவரும்… “நாம இந்த படத்தையே கைவிட்டுடலாமா?” என்று கேட்டுக் கொண்டார்களாம். அப்புறமென்ன? ஒரு சாயங்கால பொழுதில் மங்களம் பாடிவிட்டார்கள்.
சுசீந்திரனுக்கு ஒரு விஷ்ணு விஷாலோ, அப்புக்குட்டி என்கிற சிவபாலனோ கிடைக்காமலா போய்விடுவார்கள்? தேடுங்கண்ணே தேடுங்க!