காவேரி பிரச்சனையில் கன்னடர்களுக்கு ஆதரவாக சுஹாசினி? நிமிர்ந்து நில் நாயகியும் வள் வள்…

காவேரி பிரச்சனை வரும்போதெல்லாம் ‘ஒரு சொட்டு நியாயமாவது நம் பக்கம் நிகழ்ந்துவிடாதா?’ என்று விவசாயிகளும், ‘மறுபடியும் ஏழரையை இழுக்குறானுங்களே’ என்று தமிழகத்திலிருக்கும் கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட சில நடிகர்களும் கலக்கமடைவது வாடிக்கை! இரு மாநிலத்தையும் பேலன்ஸ் பண்ணுவது என்பது இனிமேல் நடக்காத விஷயமாகிவிட்டது.

காவிரி விஷயத்தில் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். வாழு… வாழ விடு என்று கர்நாடகத்தை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததுடன், உடனடியாக தினந்தோறும் பதினைந்தாயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது. மறு சீராய்வு மனுவுக்கு கர்நாடக தயாராகி வருகிறது. இதற்கிடையில் நாளை (செப்டம்பர் 9 ந் தேதி) நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளன கன்னட அமைப்புகள்.

இரு மாநில எல்லைகளோடு போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் வெளியாகவிருந்த இருமுகன், எப்போது ரிலீஸ் என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. பெரிய அளவு வருமானத்தை இழந்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம்.

இதற்கிடையில் சுஹாசினி சொன்னதாக சில விஷயங்களுடன் வாட்ஸ் ஆப் தகவல்கள் பரவி வருகிறது. கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சுஹாசினி ஒருவேளை சொல்லியிருந்தாலும் சொல்லியிருப்பார் என்று எண்ண வைக்கிறார். இது தவிர, வீடியோவில் வந்து பொங்கியிருக்கிறார் ‘நிமிர்ந்து நில்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கும் ராகினி திவேதி. இங்கு எங்களுக்கு தண்ணியில்லாத போது நாங்கள் ஏன் தமிழ்நாட்டுக்கு தரணும்? தர மாட்டோம். வாங்க போராடலாம் என்று அழைத்திருக்கிறார் திரிவேதி.

காவேரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இரு மாநில கலையுலகத்தை ஒரு வழி பண்ணிவிடும் என்பது திண்ணம். இருந்தாலும், விவசாயிகளுக்கு இவர்களால் ஏதாவது லாபம் கிடைக்குமா என்றால், அடப்போங்கய்யா… என்பதே இப்போதைய கவலையாக இருக்கிறது!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினிமாவில் குடிக்கவே குடிக்காத எம்.ஜி.ஆரை இப்படியா சித்தரிப்பது? வாங்கிக்கட்டிக் கொண்ட டைரக்டர்!

சிலருக்கு துணிச்சல் தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும். வருகிற விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். “நினைச்சேன் சொன்னேன்... இந்த நாட்ல கருத்து சுதந்திரம் இருக்கா, இல்லையா?” என்று...

Close