சும்மாயிருந்த சுஹாசினியை சுடு தண்ணியா மாத்திட்டாய்ங்க!

குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர். அப்படிப்பட்ட மனுஷன் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலரா நின்னா கூட தேவலாம் என்கிற அளவுக்கு புத்தி ஏங்கிக் கிடக்கிறான் தமிழன்.

இன்னும் இருபது வருஷம் ஆனாலும் பெய்கிற மழை நீரையெல்லாம் வெட்டியாய் வீணடித்துவிட்டு, பக்கத்து மாநிலத்தில் கையேந்துகிற புத்தி கெட்ட தமிழனுக்கு ரோசத்திற்கு மட்டும் பஞ்சமேயில்லை. கர்நாடகாவில் வசிக்கிற தமிழனும் கூட போராட்டத்தில் பங்கேற்று, “தமிழ்நாட்டுக்கு தண்ணி நஹி…” என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், வழக்கம் போல நடிகர் நடிகைகளின் தலையை உருட்ட தயாராகிவிட்டன மீடியாக்கள்.

இந்த கெட்ட டிராபிக்கில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவதையே வாடிக்கையாக கொண்டவர்கள் ரஜினி, அர்ஜுன், முரளி ஆகிய மூவரும்தான். ஆனால் இந்த முறை வித்தியாசமாக சிக்கிக் கொண்டவர் நடிகை சுஹாசினி. அவர் சொன்னதாக ஒரு ட்விட்டர் தகவல் காற்று வேகத்தில் பரவிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ கதறிக் கொண்டு மறுப்பளித்திருக்கிறார் சுஹாசினி.

“காவிரிப் பிரச்சினை தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று ட்வீட்டாகவும் வாட்சப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது. பொய். எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. நான் வெளியூரில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

சரிங்க மேடம்!

To listen the audio click below :-

Read previous post:
congress followers tension to vaaimai.

https://www.youtube.com/watch?v=GwLucxRp-LI&feature=youtu.be  

Close