என்னது… பாவாடையோட குளிக்கணுமா? சுனைனா போட்ட சண்டை!

விஜய் சேதுபதியின் படங்கள் எப்போது வந்தாலும், சினிமாவுலகத்திற்கு அது ஸ்பெஷல்தான். மொண்ணை மொக்கை கதைகளை அவர் தேர்வு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கைதான் இதற்கு முழு முதற் காரணம். ரிலீசுக்கு தயாராக இருக்கும் அவரது தற்போதைய படம் வன்மம். ‘எல்லா புகழும் எனக்கே’ என்று இரண்டு கைகளையும் விரித்து வாரிக் கொள்ளாமல், ‘ஈக்குவலா ஒரு ஹீரோவும் படத்துல இருக்காரா? ஓ.கே இருக்கட்டுமே’ என்கிற மனசின் காரணமாகவும் மதிக்கப்படுகிறார் விஜய் சேதுபதி.

சரி, மேட்டருக்கு வருவோம். ‘வன்மம்’ படத்தை ஜெயகிருஷ்ணா என்கிற புதியவர் இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார் ‘கழுகு’ கிருஷ்ணா. ‘இந்த படத்தின் கதையை சொல்லும்போது எனக்கு ஒண்ணும் தயக்கம் இல்ல. ஏன்னா, விஜய் சேதுபதி மற்ற ஹீரோக்கள் மாதிரி கிடையாது. அவருக்கு என்ன வச்சுருக்கீங்க என்று இன்னொரு கேரக்டரில் மூக்கை நுழைக்கவும் மாட்டார். தன் கேரக்டர் எப்படியிருக்கு. நாம நடிச்சா சரியா இருக்குமா என்று மட்டும்தான் பார்ப்பார். இந்த படத்தையும் அப்படிதான் பார்த்தார். படம் முழுக்க ஆக்ஷன் ஹீரோவா வர்றார். கிருஷ்ணாவுக்கு ரொமான்ஸ், காமெடி எல்லாம். இரண்டு ஹீரோக்களுக்குமே ஈக்குவலா காட்சிகள் இருக்கு. என் கேரக்டரை குறைச்சுட்டு அவர் கேரக்டரை அதிகப்படுத்திட்டார் என்று யாரும் என் மீது குறை சொல்லவே முடியாதளவுக்கு இந்த படத்தை உருவாக்கியிருக்கேன் ’ என்றார் ஜெயகிருஷ்ணா.

படத்தின் ஹீரோயின் சுனைனா. ரொம்ப சுமார்ங்ணா.. என்பது மாதிரிதான் இருப்பார் சுனைனா. இருந்தாலும் நிலைமைய நினைச்சு நீராரம் குடிக்கிற நடிகை ஒருவருமே இல்லை உலகில்! அவர் பங்குக்கு அவர் கொடுத்த டார்ச்சர்கள் அதிகம் என்கிறார்கள் யூனிட்டில். படத்தில் ஒரு குளியல் காட்சி வருகிறது. ஒரு பாடலுக்கான முன்னோட்டம் அது. குமரி மாவட்டத்தில் வேஷ்டியைதான் நெஞ்சுக்கு மேலே கட்டிக் கொண்டு குளிப்பார்களாம் பெண்கள். ஆனால் சுனைனாவுக்காக நல்ல கனமான பெட்டிகோட் கொடுத்து கட்டிங்குங்க என்று கூறியிருக்கிறார். நான் குளிக்கிற காட்சியில் நடிப்பதா? முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம் சுனைனா. (ரசிகர்களின் நலன் கருதி இருக்குமோ)

அப்புறம் எப்படியோ கெஞ்சி கூத்தாடி அந்த காட்சியை எடுத்தார்களாம். அதுவும் இந்த தண்ணியில இறங்கறதா என்று அவர் உவ்வே ஆனதுதான் பெரிய கஷ்டம். ஏனென்றால் அங்கு நீரோடைகளில் ஓடும் தண்ணீர் அக்குவா மினரல் வாட்டரை விட சுத்தமாக இருக்கும். அது புரியாமல் கவலை கொடுத்தாராம் சுனைனா.

அந்த குளியல் காட்சி எவ்ளோ நேரம் வருது என்று இயக்குனரிடம் கேட்டால், அந்த விஷயத்தை ஏன் சார் கிளர்றீங்க. முடிஞ்சு போச்சு என்று தப்பினாலும், ட்யூரேஷனை சொன்னார். மொத்தம் இரண்டு நிமிஷம் வரும் அவ்ளோதான் என்று. நல்லவேளை… தப்பிச்சோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்தானம் பர்ஸ் அபேஸ்…! பெரிய வீட்டு கல்யாணத்தில் பகீர்!

நகைச்சுவை நடிகர் சந்தானம் வன்னியர் என்பதும், சற்றே சாதிப் பாசம் மிக்கவர் என்பதும் பெரும்பாலும் தெரியாத விஷயம். ஒருமுறை அவர் திருச்சியில் ஷுட்டிங்குக்காக தங்கியிருந்தபோது, வேறொரு நிகழ்ச்சிக்காக...

Close