அஜீத் பற்றி பேஸ் மாட்டேன் பேஸ் மாட்டேன்… பேஸ்சவே மாட்டேன்! சுந்தர்சியின் மவுனராகம்

குஷ்புவும் ட்விட்டரும் கூடப்பிறந்தவர்கள் போலிருக்கிறது. குட்மார்னிங்கில் துவங்கி, குட் நைட் வரைக்கும் அவ்வப்போது எதையாவது தட்டிவிட்டுக் கொண்டேயிருப்பார். அப்படி அவர் தட்டிய ட்விட் ஒன்று, அஜீத்தையும் சேர்த்து பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சுந்தர் சி இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகிறார் என்று அவர் ட்விட் பண்ணிய பிறகு அப்படியா சங்கதி என்று அலசி காயப் போட கிளம்பிவிட்டது மீடியா. வழக்கம் போல அஜீத்தை யாரும் ரீச் பண்ண முடியவில்லை. ஆனால் கையில் கிடைத்தவர் சுந்தர் சி தானே? என்ன சார்… அஜீத் படத்தை இயக்கப் போறீங்களாமே? எப்ப ஷுட்டிங்? சொந்த தயாரிப்பா? யார் ஹீரோயின் என்றெல்லாம் மொத்தமாக கேள்வி கேட்டு அவரை மூட் அவுட் பண்ணி வருகிறார்கள்.

எது வேணா கேளுங்க. பதில் சொல்றேன். ஆனால் அஜீத் படம் பற்றி மூச்சு கூட விட மாட்டேன். எங்கிட்டயிருந்து ஒரு பிட்டு செய்தி கூட தேறாது என்று கூறிவருகிறார் அவரும். ஏனிந்த எஸ்கேப்? பொதுவாக அஜீத்தின் வழக்கம் என்னவென்றால், ஒருவரிடம் ஒரு விஷயம் சொன்னால் அது மீடியாவில் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி கசிந்தால், அந்த விஷயத்தை கை கழுவ லாஜிக்கோ, பாவ புண்ணியமோ பார்க்க மாட்டார். அஜீத் படம் கிடைப்பது இந்த கால கட்டத்தில் பத்மநாதபுரம் கஜானா சாவியை கையில் கொடுத்து இஷ்டத்துக்கு அள்ளிக்கோ என்பதற்கு ஒப்பானது. எதையாவது சொல்லி பொழப்ப கெடுத்துற கூடாதேன்னு இந்த அலர்ட்.

அது பொஞ்சாதிக்கல்லவா புரிஞ்சுருக்கணும்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்

பேரீக்காய் ஊறுகாய் ஆகலாம். ஊறுகாய் பேரீக்காய் ஆகுமோ? சந்தானத்தின் ஹீரோ ஆசையும் அப்படிதான் இருக்கிறது. அவர் திரையில் தோன்றி முழுசாய் ஒரு மணி நேரம் போன பின்பும்,...

Close