சிம்புவின் டேஷ் பாடலுக்கு ஆதரவாக ஒரு பெண் குரல்! அதுவும் முக்கியத் தொலைக்காட்சியின் நியூஸ் ரீடர்!!

தற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல் பற்றி ஒரு கருத்தை தன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சற்றேறக்குறைய சிம்புவுக்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

‘யூ டூ ப்ரூட்டஸ் பதிவு ‘இது:

ஆம் சாட்சாத் பீப் பாடல் விவகாரம் தான். இதன் வெறும் ஒரு சினிமா பாடல் விவகாரம் என்பதை தாண்டி நமது சமூக விழுமியங்களின் மீதான கண்ணோட்டத்தில் ஏற்பட்டிருக்கும் முதல் மாற்றமோ என்று ஒரு சின்ன நப்பாசை எட்டி பார்ப்பதை தடுக்க முடியவில்லை. ஏன் இதற்கு முன் எழுதாததா? காட்டாததா? என்று வீம்பு கேள்விகளை நாம் நிராகரித்து விட முடியாது. கிழ நரை எய்திய ரிக்‌ஷாக்கார ஹீரோ பதினாறைக் கூட தாண்டியிருக்காத பெண் குழந்தையை (இந்தியாவின் தற்போதைய வயது வரம்பை எடுத்து கொள்கிறேன்) மடியில் அமர்த்தி தொடையை தடவிய ஒருவகை fetish கலா ஸ்ருஷ்டியை பார்த்து புரியாமல் கைத்தட்டியவர்கள்,

கோவில் திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒரு/பல பெண்களின் அரை நிர்வாணத்தை ஆர்பரித்து (அட,வீட்டு பெண்களுக்கும்,பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியாமல் தான்) பார்த்தவர்கள், இன்றளவும் கூட டவுன் பஸ்ஸில் ஏறினால் சத்தமாய் ஒலிக்க விடும் காது கூசும் சினிமா பாடல்களை கள்ள மவுனத்துடன் பயணத்தை கடப்பவர்கள்,

நம் வீட்டு குழந்தைகள் , ‘மன்மத ராசா என்ன கணக்கு பன்னேன் டா’ என்று பாடிய போது , என்னமா உச்சஸ்தாயில பாடுறாப்பா என்று வாரியணைத்து கொண்டவர்கள் , ‘அடிடா அவள, ஒத டா அவள’ சுத்துது ‘சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீர் ல’ என்று அலறும் பாடல் நம் வீட்டு இளசுகளின் ரிங்டோன் ஆனபோது பொறுத்தவர்கள் , இவ்வளவு ஏன்? தொப்புளில் பம்பரம் விட்ட போதும், பெண்ணின் பின்புறத்தில் ரப்பர் பந்தை அடித்த போதும்,வயசு பெண்ணை தண்ணீர் தொட்டியில் முக்கி அங்கங்களை தெரிய விட்டு ‘மறைச்சாலும் தெரியாதா இளமாங்காய் முன்னே’ என்று பாட்டு பாடி ஹீரோயிஸத்தை காட்டிய போதும் சகிப்பு தன்மையை காத்தவர்கள் நாம்.

அறுபதுகளின் மாஸ் திரைப்படங்கள் தொடங்கி இன்று வரை நாம் குழந்தையின் இருப்பு பற்றி சலனமும் இன்றி தலையில் இரசித்த விஷயங்கள் தான் இவை. இன்று ஏனோ உங்கள் கண்களை உறுத்துகிறது. அல்லது உங்கள் கண்களை உறுத்த இத்தனை காலம் ஆகி இருக்கிறது என்றும் கூறலாம். வீடு முற்றுகை, கைது என்று இந்த அதிதீவிர எதிர்வினையை பார்க்கும் போது உங்கள் சமூக பொறுப்புணர்வை எல்லாம் காட்டும் ஒரே வடிகாலாக இதை பிரயோகித்து விட்டு ஓய்ந்து விடுவீரோ என்ற அச்சம் தான் எழுகிறது.

இது சினிமா என்பது சூப்பர் மார்கெட் போல ஆகிவிட்ட காலம். உங்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு உங்களுக்கு ஆகாதவை (பெரும்பாலும்)என்று நினைப்பதை புறக்கணிக்கலாமே ஒழிய உற்பத்தியாளரை தாக்குவது வேண்டாத வேலை. யார் எந்த பொருளை நுகரலாம் என்பதை விட எந்த வயதினரை இது போன்ற நுகர் எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் கட்டுபாடுகள் இறுக்கமாகும் போது இது போன்ற சீரழிவு அபத்தங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது. நான் சினிமாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை . நான் சொல்ல வருவதெல்லாம் சினிமா எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. உங்கள் உணர்திறன் இந்த பாடலில் தூண்டபட்டு இருக்கிறது. அவ்வளவே!

கெட்டது செய்தால் சாமி கிராஃபிக்சில் வந்து சாமியாடிய படியே கண்ணை குத்தி கொல்லும் திரைப்படங்களை பார்த்து எப்படி யாரும் திருந்தி விடவில்லையோ அதேபோல் இந்த பாடலால் ஒரு சமூகம் வீழ்ந்திடாது. வீழ்ச்சியின் நிஜமான வேர் ‘ பாட்டில்’ அல்ல “பாட்டிலில்” உள்ளது என்றே நினைக்கிறேன். என் வீட்டு குழந்தையின் விழுமியம் ,கபடமின்மை பாதிக்கிறது என்று முழங்கும் திடீர் சீர்திருத்தவாதிகளே, தயவு செய்து அப்படியே உங்கள் எதிர்ப்பை ,கதாநாயகன் எதிரிகளை ஓட ஓட வெட்டி, சுட்டு , ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சத்தமாக பேசி, அடித்தே கொன்று பழிவாங்கும் இரத்தம் தெறிக்கும் திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரிடமும் காட்டுங்கள். அடுத்த தலைமுறை உங்களுக்கு கடன்பட்டதாய் இருக்கட்டும்!!

நான் முன்பு குறிப்பிட்டது போல சினிமா என்பது ஒரு பல்பொருள் அங்காடி. அதில் சாக்லெட் பாக்கெட்டுகளும் கிடைக்கும் , காண்டம் பாக்கெட்டுகளும் கிடைக்கும் . உங்கள் குழந்தைகள் கையில் எடுப்பது என்ன என்பதை கண்காணிக்கும் கடமை உங்களுக்கு உண்டு!!

நன்றி – சரண்யா சுந்தர்ராஜ் முகப்புத்தகத்திலிருந்து… 

2 Comments
  1. பிசாசு குட்டி says

    சரிங்க ஆண்டி சிம்பு என்ன வார்த்தையை மறைத்தார் என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா ? முடியாதுல்ல அது தான் அசிங்கம். சொதந்திரம் இருக்குன்னு நடுரோட்டுலயா உச்.. பீப் போக முடியும் ? மறைவா தானே போறோம் ..

  2. ABDUL AZIZ says

    உனக்கு வெட்கமா இல்லை. நீ எல்லாம் ஒரு பொம்பளையாடி !!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெயம் ரவிக்கு குஷ்பு ஸ்பெஷல் பரிசு! யூகிங்க பார்க்கலாம்…

கற்பு பற்றி பேசினால்தானே குஷ்புவை சதாய்ப்பீர்கள்? நட்பு விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். “என் பெட்ரூம்ல யார் போட்டோவையும் நான் மாட்டுனதில்ல. ஒரே ஒரு...

Close