சர்ஜரிக்கு ரெடி! இனி நயன்தாரா ஃப்ரீ…
பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து குதுகலப்படலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் மனதளவில் இந்த காதலை நொறுவையில் போட்டு நசுக்கி நாளாச்சு. இனிமேல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார் பிரபுதேவா. மறுபடியும் அவரை நினைக்கறதா? சே… என்கிறார் நயன்தாரா.
காலம் இப்படி இருவர் மனசையும் கண்டபடி பிய்த்து போட்டாலும், ஆத்திர அவசர அன்புமிகுதியில் குத்திக் கொண்ட பச்சை அப்படியே கையில் இருக்கிறதே என்ன பண்ண? கேமிராவுக்கு முன் வந்தால், மேம்… கையில அந்த இனிஷியல் வருது. கொஞ்சம் டச் பண்ணிட்டு வர முடியுமா என்கிறார்களாம் ஒளிப்பதிவாளர்கள். எப்படியோ மூடி மறைந்தாலும், கழுவி ஊற்றினால் காணாமல் போகிற சமாச்சாரமா அது.
நடுவில் மருத்துவர்களை நாடிய நயன்தாராவுக்கு சொல்லப்பட்ட அட்வைஸ் ‘பேசாம அறுவை சிகிச்சை செஞ்சு அகற்றிடுங்க’ என்பதுதான். முதலில் இதற்கு அஞ்சிக் கொண்டிருந்தவரின் அறிவுக்கண்களை இவரை போலவே காதலில் விழுந்து நிம்மதியை தொலைத்த தீபிகா படுகோனே திறந்திருக்கிறார். அவர் தன் கழுத்தோரத்தில் குத்தியிருந்த ஆர்.கே என்கிற டாட்டூவை இப்படிதான் சர்ஜரி மூலம் அழித்தாராம். இதை தொடர்ந்து நயன்தாராவும் தயாராகிவிட்டார்.
ஆபரேஷன் ரகசியமாதான் நடக்கும். இல்லேன்னா வெளிநாட்ல நடக்கும். நமக்கு தெரியவரும்போது, அவர் இன்னொரு டாட்டூவுக்கு ரெடியாகியிருப்பார். எனிவே ஆபரேஷன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.