நாகேஷா பிறந்திருக்கக் கூடாதா? சூர்யா ஏக்கம்!
நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சூர்யா அண்டு பேமிலியின் பங்கு நிறையவே இருக்கிறது. காணும் இடமெல்லாம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது எதிர் கோஷ்டி. ஆனால் நடிகர் சங்க முணுமுணுப்பு எதுவும் இல்லாமல் நடந்தது அவரது தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பசங்க-2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா! (அல்லாரும் ரொம்போ ரீஜண்டா நடந்துகினாங்கப்பா)
திரையிடப்பட்ட ட்ரெய்லர், ‘இப்பவே படத்தை காமிச்சா இன்பம் இன்பம்’னு சொல்ல வைக்கிற தரத்தில் இருக்க, ஏகப்பட்ட கைதட்டல்களுக்கு நடுவில் மைக்கை பிடித்தார் சூர்யா. படத்தில் இவர் சின்ன குழந்தைகள் படிக்கும் பள்ளியின் வாத்தியாராக நடித்திருக்கிறாராம். படமே குழந்தைகள் மன நிலை குறித்த பார்வைதான்! ஒரு காட்சியில் ஜிம்கேரி போல காதுகளை மட்டும் ஆட்டினார் சூர்யா. அங்கு வந்திருந்த குழந்தைகள் அத்தனை பேரும் உற்சாகத்தில் கூச்சலிட்டது தனி சந்தோஷம்.
என்ன பேசினார் சூர்யா?
“இந்த கதையை டைரக்டர் எங்கிட்ட சொன்ன பிறகு நானே ஏராளமான பேர வரவழைச்சு திரும்ப திரும்ப சொல்ல சொன்னேன். பாண்டிராஜ் சளைக்காமல் சொன்னார். தேசிய விருது வாங்கிய இயக்குனர் அவர். இத்தனை முறை கதை கேட்கிறாங்களேன்னு கொஞ்சம் கூட அலுத்துக்கல. அது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்திச்சு. இந்த படத்துக்காக எங்கிட்ட ஆறு நாள்தான் டேட்ஸ் கேட்டார். அதற்கப்புறம் அதுவே பனிரெண்டு நாளுக்கும் மேல் வளர்ந்துருச்சு. ஷுட்டிங் போயிட்டு இருக்கும்போதுதான் நாம ஒரு நாகேஷாவோ, ஜிம்கேரியாவோ பிறக்கலையேன்னு வருத்தம் வந்துச்சு”.
“இந்த காலத்தில் குழந்தைகளை வளர்க்கறது எப்படிங்கறது ஒவ்வொரு பெற்றொருக்கும் தெரியாத விஷயமா இருக்கு. அது பற்றி இந்த படம் விரிவா பேசியிருக்கு. இப்படியொரு படத்தை தயாரிச்சதுல எனக்கு ரொம்ப திருப்தி” என்றார் புன்னகையோடு.
பசங்க 1 ல் நடித்தவர்கள் இப்போது அரும்பு மீசை வாலிபர்களாகிவிட்டார்கள். அவர்கள் வெளியிட, பாடல் குறுந்தகட்டை பசங்க 2 வில் நடித்த குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். இந்த பசங்க டீம் மூணு நாலுன்னு வளர்ந்துகிட்டே போகட்டும்… சினிமாவில் மற்றதை நினைக்க நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை பற்றி நினைப்பதற்கு ஒரு பாண்டிராஜ்தானே இருக்கிறார்!
#Surya, #2D, #pandiraj, #Pasanga2, #pasangparttwo, #Jothika, #Bindhumadhavi, #vidhya, #arolcaroli, #escapeartistmadhan, #KEGnavelraja, #Amalapal, #childransstory, #school, #NAMuthukumar, #Madhankarki, #Studiogreen #Balasubramaniyem
Kuzhandhaigalai patri nenaikka koodiya OREY PANDIRAJ’ai than namma sombhu romba varushama alaikazhichittu irukkan!!!!!