கார்த்திக்கு என்னாச்சு? -டென்ஷன் சூர்யா
‘கார்த்தி உடல்நிலை என்னாச்சு?’ கோடம்பாக்கத்தில் திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகளாக மாறியிருக்கிறது இந்த அக்கறை. அதற்கு காரணம் இல்லாமலில்லை! பிரஸ்சிடம், ‘அவனுக்கு ஒண்ணுமில்ல… நர்ஸ் டாக்டர்களை கலாய்ச்சுகிட்டு நல்லா இருக்கான்’ என்றெல்லாம் கூறி, ஃபோர் ட்வென்ட்டி ரூம் நம்பர் கதையெல்லாம் சொன்ன சூர்யா, பிரஸ் தவிர மற்றவர்களை சந்திக்கும் போதுதான் மிகுந்த கவலையோடு காணப்படுகிறாராம்.
திரும்ப திரும்ப கார்த்தி பற்றியே அவர் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறது பிரபலங்கள் வட்டாரம். நாலு வார்த்தை அவர் பேசினா அதில் ஒரு வார்த்தை கார்த்தியாக இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, அடிக்கடி போன் செய்து மருத்துவர்களை விடாமல் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறாராம். இதற்கிடையில் ‘கொம்பன்’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது கார்த்தி வராமலே! லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
புட் பாய்சன் என்று லேசாக விட்டுவிடாமல் அவருக்கு வந்த திடீர் மயக்கம் குறித்தும் விரிவான மருத்துவ சோதனைகள் போய் கொண்டிருக்கிறதாம். தம்பியின் உடல் நலத்தின் மீது எந்நேரமும் அக்கறையோடு இருக்கும் சூர்யா,இதன் காரணமாக அஞ்சான் பணிகளை கூட சற்று தள்ளி வைத்திருப்பதாக தகவல்!
கார்த்தியே தன் கலகல பேச்சால் பிரஸ்சை சந்திக்கிற வரை, அவர் குறித்த கவலைகள் சூர்யாவை மட்டுமல்ல, திரையுலகத்திலிருக்கிற மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். அதை தவிர்க்க முடியாது!