சூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா
நயன்தாராவின் ‘நச்’ பாலிஸிகளுக்குட்பட்டுதான் அவரை படங்களில் புக் பண்ண வேண்டியிருக்கிறது. அதுவே அவருக்கு தரப்படும் சம்பளத்தை தவிர்த்து சில லட்சங்களை விழுங்கிவிடுகிறது. இருந்தாலும் நயன்தாராவை பொம்பளை ரஜினி என்றே போற்றுகிறார்கள் தமிழிலும் தெலுங்கிலும். ஏனென்றால் அவருக்கான ரசிகர் வட்டம் அப்படி. அவருடன் நடிக்க சக ஹீரோக்களே தவியாய் தவிக்கிறார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள்ளும் ரசிகர்களை பெற்றிருக்கிற அளவுக்கு கவர்ச்சி பாவையாக ஜொலிக்கிறார் நயன்தாரா..
இந்த நிலையில் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, வெங்கட் பிரபு இயக்கப் போகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி தேடி மும்பை வரைக்கும் சல்லடை போட்டார்கள். கடைசியில் ‘அட… நயன்தாராவையே கேட்டு பார்க்கலாமே?’ என்று சூர்யா யோசிக்க, ‘ஆமென் ’ என்று கூறிவிட்டார் வெங்கட்பிரபுவும்.
சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தால், வேண்டாம் என்றா கூறுவார் நயன்தாரா? வாங்குகிற சில கோடிகளில் பல லட்சங்களை கூட குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக கூறிவிட்டாராம். பேச்சு வார்த்தைகள் சுபமாக முடிந்தால், சூர்யா- நயன் ஜோடி கோடம்பாக்கத்தை கலக்கும்.
அழகு ஜோடிகள் எப்போது சேர்ந்தாலும் ஆராதிக்கதான் ஸ்பெஷல் மந்திரங்கள் இருக்கிறதே… முழங்குங்கள் ரசிகர்களே!