சூர்யாவானார் சிம்பு

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின் டைரக்டர் பாண்டிராஜ். இவரிடம் சொல்லாமலே அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருந்தாராம். பேரதிர்ச்சியாகிவிட்டார் பாண்டி. ‘இந்த முடி வளர்ந்த பிறகுதானே ஷுட்டிங் வைக்க முடியும்? இப்படி பண்ணிட்டீங்களே?’ என்று திரும்பி வந்துவிட்டார்.

இந்த செய்தியை கடந்த வாரமே நாம் வெளியிட்டிருந்தோம். சரி… அப்படியென்ன ஹேர் ஸ்டைலை வைத்திருந்தார் சிம்பு?

‘அஞ்சான்’ படத்தில் சூர்யா வருவாரே, அதே கெட்டப் தானாம். இது வேறு ஏதாவது படத்திற்காக வைக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லையாம். ச்சும்மா… அஞ்சான் ஸ்டில்லை பார்த்தாராம். நமக்கு வச்சா எப்படியிருக்கும் என்று தோன்ற அப்படியே ஆகிவிட்டார். சொந்த பணத்தையே சினிமாவுல போட்டா அதற்கும் வட்டிக்கணக்கு பார்க்கும் ஏரியா இது. இங்கு பிள்ளையின் விளையாட்டை பெருங்கொடுமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் அடுக்குமொழி அப்பா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ வட போச்சே வட போச்சே ’ குழந்தையாக மாறிய ரம்யா நம்பீசன்

நடிகைகளை சினிமாவில் பாட வைக்கலாமா? கூடாதா? முறைப்படி சங்கீதம் கற்றவர்களே வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, வெறும் நடிகை என்கிற புகழை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள்...

Close