மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளையாக நடிக்கிறார் சூர்யா? Exclusive
இந்தியாவும் தமிழ்நாடும் ஒவ்வொரு நாளும் உருப்படாமல் போய் கொண்டிருப்பதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்தான் ராமர் பிள்ளை. பெட்ரோல் மாபியாக்கள் இவரை டிஸ்போசிபிள் ‘சரக்கு’ கிளாஸ் போல கசக்கி எறிந்தாலும், தன் லட்சியத்துக்காக இப்போதும் போராடிக் கொண்டிருக்கிற போராளி. “அது பெட்ரோலோ, கிட் ரோலோ? 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தர்றாரு. வண்டியில் போட்டால் புகையில்லாமல் ஓடுதில்ல? அப்புறம் என்னவாம்? பயன்படுத்திகிட்டு போக வேண்டியதுதானே?” என்று புலம்பும் ஒவ்வொரு சாமானியன் குரலும், அரசாங்கத்தின் காதுகளை எட்டவே இல்லை இந்த நிமிஷம் வரைக்கும்.
இருந்தாலும் தன் லட்சியத்தை நோக்கி வலியோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார் மனுஷன். இவரது வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையாக்கி, அதில் சூர்யாவை நடிக்க வைத்தால் எப்படியிருக்கும்? ரோமியோ ஜுலியட் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய லட்சுமணுக்கு இந்த எண்ணம் தோன்ற, இதோ- கிளம்பிவிட்டார்கள் சூர்யாவும் இவரும்!
தற்போது ஜெயம் ரவியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லட்சுமண் சொன்ன இந்தக்கதை சூர்யாவுக்கு பிடித்துவிட்டதாகவும், அது பற்றிய பேச்சு வார்த்தைகள் மளமளவென நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல். சூர்யா மாதிரி மக்கள் இமேஜ் உள்ள நடிகர்கள் இப்படியொரு கதையில் நடித்தால், ராமர் பிள்ளைக்கே ஒரு தீர்வு கிடைக்கக் கூடும்.
பார்க்கலாம்… பெட்ரோல் மாபியாக்கள் இங்கும் தீக்குச்சி கொளுத்தாமல் நிம்மதியாக வழி விட்டு ஒதுங்குகிறார்களா என்று?
https://www.youtube.com/watch?v=rgw-IoWgqRU