நம்பி வந்த தயாரிப்பாளர், நடுங்க வைத்த சுசீந்திரன்


எவ்வளவுதான் பெரிய இயக்குனர் என்றாலும், பணம் போட ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால் அவரது கற்பனையை சூடம் காட்டி மூடி வைக்க வேண்டியதுதான். ஆனால் இன்று பணம் போடும் தயாரிப்பாளருக்கு மரியாதை இருக்கிறதா? மண்ணாங்கட்டி…! சமீபத்தில் ஒரு தயாரிப்பாளருக்கு சுசீந்திரன் கதை சொன்ன போன கதையை கேளுங்கள். செம ஹாட்டாக இருக்கும்.

நல்ல இயக்குனர், பொறுப்புணர்வோடு படம் தரக்கூடியவர் என்ற அபிப்ராயம் உண்டு சுசீந்திரனுக்கு. (இதில் ராஜ‘பட்டை’யை சேர்க்க வேண்டாம்) அந்த ஒரு காரணத்திற்காக தன் இரண்டாவது படத்தை சுசீந்திரன் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் அந்த தயாரிப்பாளர். முதல் படம் மேகா, ஸாரி மெகா ஹிட் இல்லையென்றாலும்!

இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். பத்து நிமிஷத்தில் ஒரு கதையையும் சொன்னாராம் சுசீந்திரன். நல்லாயிருக்கு. ‘இந்த கதையில் த்ரிஷா இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்ல?’ இது தயாரிப்பாளரின் அபிப்ராயம். ‘ம்…’ என்று கேட்டுக் கொண்ட சுசீந்திரன், அதற்கப்புறம் கண்டிஷன் போட ஆரம்பித்திருக்கிறார். ‘கதைய சொல்லிட்டேன்ல. பின்னாடி அதுல தலையிடுற வேலை வச்சுக்கக் கூடாது. ஷுட்டிங் ஸ்பாட்ல வந்து மானிட்டர் முன்னாடி சேர் போட்டு உட்கார்ந்துக்கக் கூடாது’ என்றாராம். இதுவரைக்கும் கூட ஒரு படைப்பாளியின் சுதந்திரம் அது என்று பொறுத்துக் கொண்டார் தயாரிப்பாளர். அதற்கப்புறம் அவர் சொன்ன கண்டிஷன் கேட்டுதான் ஆடிப்போனாராம்.

‘ஷுட்டிங் ஸ்பாட்ல வந்து ஹீரோயின்ட்ட வழியறது. அறிமுகப்படுத்தி வைங்கன்னு கேட்கறது. வேற நோக்கத்துல சைடு வாங்குறதுன்னு இருக்கக் கூடாது. எனக்கு கெட்ட கோபம் வரும்’ என்றாராம். அதுவரைக்கும் பொறுமையாக இருந்த தயாரிப்பாளர், ‘தம்பி… இப்படி ஓவரா பேசுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். ஏதோ உங்க படமெல்லாம் பிடிச்சிருக்கறதாலதான் வரச்சொல்லி பேசினேன். எனக்கும் குடும்பம் இருக்கு. அலைச்சலுக்காக இங்க வர்றவன் நான் இல்ல. முதல்ல ஒருத்தர்ட்ட பேசுறதுக்கு முன்னாடி அவருடைய குணம் என்ன? பெருமை என்னன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க. உங்களை வச்சு படம் பண்ணுற ஐடியாவே எனக்கு இப்ப இல்ல. கௌம்புங்க…’ என்றாராம் கோபமாக!

ஆக புள்ளி வைக்கறதுக்கு முன்னாடியே கோலம் அலங்கோலம் ஆகிருச்சு!

1 Comment
  1. hari says

    Wat he said is right. This type of approach needs to be taken for welfare of a film to be made effectively without any interruption. Plz don’t put article on the favor of this negative producer.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கிழவனை கட்டிக் கொள்ளும் லட்சுமிராய்?

அதென்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் லட்சுமிராய் முகம் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கிறது பட விழாக்களில். இரும்புக்குதிரை, அரண்மனை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்று அவர் நடிக்கும் படங்கள்...

Close