ஷகீலாவை சுற்றி சுற்றி வர்றாங்களே…
ஷகிலா இளைத்தாலும் இளைப்பார், அவரது படத்திற்கான ‘மரியாதை’ மட்டும் இளைக்கவே இளைக்காது போலிருக்கிறது. நேற்று வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் கூட, விஷால், ஷகீலா படம் பார்க்க ஆசைப்படுவதாகவும், அவரை லட்சுமி மேனனே தியேட்டருக்கு அழைத்துச் சென்று படம் பார்க்க வைப்பது போலவும் ஒரு காட்சியை வைத்து குண்டு குண்டு பூசணிக்கா விளையாட்டை ஆடியிருக்கிறார் டைரக்டர் திரு. ஷகிலா நேரடியாக நடிக்காத படம் என்றாலும், இந்த காட்சிக்கு தியேட்டரிலும் விசில் பறக்கிறதாம்.
இரண்டு தினங்களுக்கு முன் ‘காதல் பஞ்சாயத்து’ என்றொரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் ஷகீலா. சிங்கமுத்து ஷகிலாவை கட்டிப்பிடிப்பது போலவும் சக கான்ஸ்டபுள்கள் எச்சில் வழிய அதை ரசிப்பது போலவும் ஒரு சீனை காட்டினார்கள். ஷகீலா போலீஸ் கான்ஸ்டபுளாக நடித்தாலும் கூட அவருக்கான செக்ஸ் இமேஜை இங்கே யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விழாவுக்கு ஷகிலாவையும் அழைத்தார்களாம். ‘ஞான் அவிட வந்தா மொத்த பிரஸ்சும் என்னைதான் மேயும்’ என்று கூறி, அங்கு வருவதையும் தவிர்த்திருக்கிறார் அவர்.
இப்படி ஷகீலாவால் நிரம்பி வழியும் தமிழ்சினிமா, எப்போது அவரை விட்டொழிக்கப் போகிறதோ? அதை விடுங்கள். காதல் பஞ்சாயத்து படத்தின் ஹீரோவை பார்த்தால், இவரும் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு குறி வைப்பார் போல் தெரிகிறது. நின்றால், நடந்தால், திரும்பினால், இருமினால் அப்படியே ரஜினி போலவே இமிடேட் செய்தார். ஒரு பாடல் காட்சியில் இரண்டு கையையும் விட்டுவிட்டு 350 சிசி பைக்கை இவர் ஓட்டி வந்தது போல ரஜினியே கூட செய்திருக்க மாட்டார். இவர் ஒரு பைக் ரேசர் போலிருக்கிறது. அந்த பைக்கை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட சாகஸங்கள் செய்து கொண்டிருந்தார் அந்த பாடல் காட்சியில்.
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளும், ரிச்சான மேக்கிங்கும் காதல் பஞ்சாயத்தை பத்தோடு பதினொராவது படம் என்கிற வரிசையில் வைக்க முடியவில்லை. விழாவுக்கு வந்த பேரரசு கூட ரஜினிய காப்பியடிக்காதீங்க, நாலைஞ்சு படத்துல நடிச்சு ஹிட்டான பிறகு அப்படியெல்லாம் செய்யலாம் என்று புத்திமதி சொல்கிற அளவுக்கு ரஜினியை இப்படத்தின் ஹீரோ தேவன் காப்பியடித்தாலும், இந்த படத்தின் வியாபாரம் ஷகீலாவையும் நம்பியிருக்கிறது.
ரஜினியும் ஷகிலாவும் பஞ்சாயத்து கூட்டாதவரை இன்னும் 100 காதல் பஞ்சாயத்துகள் வரக்கூடும். கண்டு களிக்கதான் நாம இருக்கோமே?