பப் ஒன்று… பலகாரம் ரெண்டு! கவ்வத் துடித்த பூனைகளாக ஹீரோவும் மியூசிக் டைரக்டரும்!
ரெஜினா, மஞ்சிமா மோகனுக்கெல்லாம் பப்புக்கு போகிற பழக்கம் இருக்கா? என்று கேட்டு, ‘ஆமாம்’ என்ற பதில் வந்தால், சொசைட்டியில் சில பல தற்கொலைகள் விழுந்தாலும் விழும்! அவ்ளோ நம்பிக்கை அந்த குத்துவிளக்குகள் மீது! ஆனால் அவ்விருவரும் சமீபத்தில் ஒரு பப்புக்கு வந்தார்கள். இடம் சென்னைதான்… வேறெங்கே!
இவர்களுக்கு ‘ஹாய்’ சொல்லியபடி சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அந்த நடிகைக்கு பாடவும் தெரியும். இது நம்ம ஆளு என்று கொஞ்சுகிற பேஸ்கட்டுதான் அவருக்கு! ஆனால் தலைகீழாக நின்றாலும் டாப்புக்கு வருகிற பிராப்தம் இல்லவே இல்லை. வேறு வழி? இப்படி பப்பு பப்பாக சுற்ற வேண்டியதுதான். இவர் வந்த கொஞ்ச நேரத்திலேயே இவருக்கு லிப் கிஸ் கொடுத்து அழியாப் புகழ் பெற்ற அந்த முன்னணி இசையமைப்பாளரும் அதே பப்புக்குள் என்ட்ரியானார். அதற்கப்புறம், பிரிந்தவர் கூடினால் பேசுவும் வேண்டுமோ என்றானது அந்த ஏரியா.
என்ன ஒரு ஆச்சர்யம்? எல்லா கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்தால் என்னவோ சொல்லுவார்களே,…. அப்படியொரு விஞ்ஞான விசேஷம் ஆகிவிட்டது அந்த இடம். ஏன் இவர்களை தொடர்ந்து வேறொரு ஹீரோ உள்ளே வந்தாரல்லவா? அதனால்தான் அப்படி. வந்தவர் பிரபல நடிகரின் மருமகன். ஏற்கனவே இசைக்கும் இவருக்கும் மனஸ்தாபம். இசையை அங்கு பார்த்ததும் கடும் சுணக்கத்துக்கு ஆளாகியதுடன் சட்டென்று வேறொரு டேபிளில் அமர்ந்து கொண்டார். அந்தப்பக்கம் திரும்பவே இல்லை.
ஹீரோ வரலேன்னா என்ன, போவட்டும். நாமும் அந்த பக்கம் போகக்கூடாது என்று நினைத்த இசை, அங்கிருந்த முயல்குட்டிகளிடம் தொடர் அரட்டையில் ஈடுபட்டிருக்க, அப்போதுதான் கவனித்தார்களாம் ஹீரோ உள்ளே வந்து உட்கார்ந்திருப்பதை. அப்புறம் என்ன? மொத்த சிட்டுகளும் டேபிள் விட்டு டேபிள் பறக்க, இசையின் டேபிளில் சில பல கிளாஸ்களும், தீரும் நிலையிலிருந்த பாட்டிலும் மட்டும்தான் மிச்சமிருந்தன.
போங்க… போங்க… அவன் கோவிச்சுக்க போறான் என்று பெருந்தன்மையுடன் வந்த சிட்டுகளை விரட்டிவிட்டு, தனியாக அமர்ந்து தம் கட்டிவிட்டு கிளம்பினார் மருமகன்.
இதன் மூலம் அறியப்படுவது யாதெனின்…. அவரும் இவரும் இன்னும் பேசிக்கல. பாட்டு நடிகை மீண்டும் பேச்சப் ஆகிவிட்டார் இசையமைப்பாளருடன்.
ஒரு டானிக் என்னவெல்லாம் பண்ணுதப்பா?
Anirudh, Andrea, Dhanush