மெல்ல தமிழினி சாகும்! கொல்லக் கிளம்பும் விஜய், விஜய் சேதுபதிகள்!
‘தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்’ என்று பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரிவிலக்கு இல்லை என்றதும் இங்கே வெட்டரிவாள் வேல் கம்போடு தமிழை கொலை பண்ண கிளம்பிவிட்டது ஒரு கோஷ்டி. அதில் விஜய், விஜய்சேதுபதிகளுக்கு கூட அக்கறை இருக்கிறதே என்று நினைத்தால்தான் வேதனை கொப்பளிக்கிறது.
கவுதம் மேனன் மலையாளியாக இருந்தாலும், தன் பட தலைப்புகளில் தமிழ்… அதுவும் அழகு தமிழ் இருப்பது போல பார்த்துக் கொள்வார். மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் தலைப்பு மட்டுமல்ல… படத்தில் வரும் கேரக்டர்களின் பெயர்கள் கூட கணியன் பூங்குன்றன், தமிழ்வாணன் என்று அமைத்து தமிழுக்கு வலு சேர்க்கிறார்.
ஆனால் பல லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய்யோ, விஜய் சேதுபதியோ, அல்லது இன்னபிற வளரும் நடிகர்களோ தமிழாவது ஒண்ணாவது… போங்கய்யா போங்க மனப்பான்மையுடன் தங்கள் படங்களுக்கு தலைப்பு வைப்பதே என்னவென்று சொல்ல?
விஜய்யின் ‘மெர்சல்’ தலைப்பு தமிழில்லை. விஜய்சேதுபதி பெண் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தமிழில் பெயர் வைத்தாலும் சரி. வைக்காவிட்டாலும் சரி. வரிவிலக்கு சலுகை எந்த படத்திற்கும் இல்லை என்ற அரசின் சமீபத்திய முடிவுதான்.
ஆக… பணத்திற்காக ஒரு வாய். பணமில்லேன்னா வேற வாய். இதானா சார் உங்க தமிழ் டக்கு?
https://youtu.be/GgUK4IbDurY