டீ விற்கிறார் தனுஷ்! தீ வைக்கிறார் பிரபு சாலமன்?

இந்த முறை ரயிலை குத்தகைக்கு எடுத்துவிட்டார் பிரபுசாலமன். கதை கெட்டி உருண்டையாக இருக்கணும். லொக்கேஷன் தேன் புட்டாக இருக்கணும் என்பதுதான் அவரது மேஜிக் லாஜிக்! மைனா, கும்கி, இவ்விரண்டும் கதையும் கெட்டி. லொக்கேஷனும் கெட்டி. அதற்கப்புறம் வந்த கயல், கதையை மட்டும் கவிழ்த்துத் தள்ளியதே தவிர, லொக்கேஷனில் அதே மேஜிக்கை நிகழ்த்தியிருந்தது. எப்படியோ, அதற்காகவே மென்மையாக கடித்துவிட்டு ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது கயல்.

அதற்கப்புறம் பிரபு சாலமன் இயக்குகிற படத்தில் தனுஷ் இருக்கிறார் என்பதே தனி ருசிதான். ஏனென்றால் பிரபுசாலமன் பெரிய நடிகரோடு சேர்வது இதுவே முதல் முறை. (அதற்குமுன் அர்ஜுனை வைத்து படம் இயக்கியிருந்தாலும்…) தனுஷூக்கும் சாலமனின் ஸ்டைல் புதுசுதான். இப்படி இருவரும் டீயும் ஸ்டிராங்கும் போல ஒன்றாக கலந்து ஒரு படத்தை தரவிருப்பது ரசிகர்களுக்கு இன்பம். இந்த படத்தில் தனுஷ் என்னவாக வருகிறார்? ரயிலில் டீ விற்கும் பையனாக வருகிறாராம். அப்படியென்றால் ஹீரோயினும் அதே ரயிலில் வரவேண்டுமே? ஆமாம்… அதே ரயிலில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷுக்கும் தனுஷுக்கும் லவ் வர, அதற்கப்புறம் என்னாச்சு என்பதுதான் என்ட்!

கதைப்படி ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ், படத்திலும் மலையாளம் கலந்த தமிழ் பேசுவது போலவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறாராம். (டப்பிங் மெனக்கெடல் இருக்காது) மனசுக்குள் தீ மூட்டும் அருமையான காதல் கதைதானாம் இது.

“தனுஷ் மாதிரி ஒரு ஹீரோவோட வொர்க் பண்ணும்போதுதான், புதுமுகங்களை வச்சு பண்றதை விட, இப்படிப்பட்ட நடிகர்களோடு சேர்வது எவ்வளவு ஈசியானது என்பதை உணர முடியுது” என்கிறார் பிரபுசாலமன். ஓரு காட்சியை சொன்னால் அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்டு ஒரே ஷாட்டில் ஓ.கே பண்ணுகிறாராம் தனுஷ். ரயிலை வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டு ரீடேக் ரீடேக் என்று போனால், கடைசியில் தண்டவாளமே கோவிச்சுக்கும் அல்லவா?

எல்லாரும் சேர்ந்து ரயிலை வேகமா ஓட்டிகிட்டு இருக்காங்க என்பதுதான் நல்ல செய்தி!

பின்குறிப்பு- படத்திற்கு ரயில் என்று பெயர் வைக்கலாமா என்று யோசிக்கிறார்களாம். இன்னும் முடிவாகவில்லை. ஒருவேளை ரயில்வே தரும் லொக்கேஷன் பில்லை பார்த்தபின் முடிவெடுப்பார்களோ, என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கன்னடத்து பைங்கிளிக்கு கர்வம் மட்டும் போகல? அவமானப்பட்டு திரும்பியோர் அலறல்!

நேற்று கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவிக்கு பிறந்த நாள்! பொதுவாக தனது பிறந்த நாளை அவர் பெங்களூருவில் கொண்டாடுவதுதான் வழக்கமாம். ஆனால் நேற்று சென்னை வந்துவிட்டார். அந்த காலத்து...

Close