நெற்றியை விட மூக்கு நீளமா இருக்கிறவங்க முட்டாளாதான் இருப்பாங்க! பத்ரி டயலாக்கில் பஞ்சர் ஆகும் மூக்கு!

விஜயலட்சுமியெல்லாம் கவர்ச்சி காட்டுனா வௌங்குமாய்யா நாடு? எலும்பும் தோலும் எட்டிப்பார்க்க ஒரு மாராப்பு அணிந்து கொண்டு பாத் டப்பில் குளித்துக் கொண்டிருந்தார் அவர். நம்புங்கள்… அவரை ஜொள்ளொழுக ரசித்துக் கொண்டிருந்தார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். டைரக்டர் பத்ரி இயக்கிய படங்களில் நகைச்சுவைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், விஜயலட்சுமியின் கவர்ச்சியையும் அந்த லிஸ்ட்டில் வைத்துவிட்டு பத்ரி சொல்வதை கேட்போமா?

பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’ படத்தின் ரீமேக்கான மற்றொரு தில்லுமுல்லுவை இயக்கியது பத்ரிதான். அதில் மிர்ச்சி சிவா ஹீரோ. இப்போது இவர் இயக்கும் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் வசனத்தை எழுதியிருப்பவர் அதே சிவா. இந்த படத்தில் சிவாவை நடிக்க வைக்காமல் வெறும் வசனத்தை மட்டும் அவர் பொறுப்பில் விட்டுவிட்டார் பத்ரி. ஏன்? ‘சிவா பேசிக்கலா ஒரு கிரிக்கெட்டர். அதனால்தான்’ என்றார்.

தொடர்ந்து சிவா பேசியதை கேட்டால், அந்த பாடல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆசை இப்போதே வந்தது. தில்லு முல்லு ரீமேக்கின் போது, பழைய படத்தில் வரும் ராகங்கள் பதினாறு பாடலை இடைவேளைக்கு சற்று முன்பு வைத்திருந்தாராம். ‘ஒருநாள் பாலசந்தர் சார் போன் பண்ணினார். அந்த பாடல் காட்சி எந்த இடத்தில் வருதுன்னு கேட்டார். நான் இன்டர்வெல்லுக்கு முன்னாடின்னு சொன்னேன். அப்ப அவர் சொன்னார். அந்த இடத்தில் வச்சா எல்லாரும் எழுந்து தம் அடிக்க போயிருவாங்க. ஒரு நல்ல பாடல் யாரும் கேட்காமல் மிஸ் ஆகிடும். அதனால் இடைவேளைக்கு அப்புறம் வைன்னு சொன்னார். அவர் சொன்னபடியே வச்சேன்’.

‘ஆனால் இந்த படத்தில் வேணும்னே ஒரு பாடல் காட்சியை இன்டர்வெல்லுக்கு சற்று முன்பு வச்சுருக்கேன். ஆனால் யாருக்கும் போரடிக்காத மாதிரி, அதை ஒரு ஆக்ஷன் சீக்குவென்ஸ் பாடலா மாத்திட்டேன். பொதுவா ஒரு பாடல் காட்சியை நடன இயக்குனர்தான் ஷுட் பண்ணுவார். முதன் முறையா இந்த பாடல் காட்சியை ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் ஷுட் பண்ணியிருக்கார் ’ என்றார்.

படத்தில் ஆடுகளம் நரேனை குறித்து சொல்வதாக ஒரு டயலாக் வருகிறது. ‘நெற்றியை விட மூக்கு நீளமா இருக்கிறவன் முட்டாளாதான் இருப்பான் ’ என்று. பத்ரியிடம், அப்படிங்களா? என்றால், சாமுத்ரிக்கா லட்சணம் புத்தகத்தில் அப்படிதான் எழுதியிருக்காங்க என்றார். யாரோட கால்ஷீட்டோ கிடைக்காத கோபத்துல வச்சுட்டாரோன்னு தோணுது! ஒருவேளை இருக்குமோ?

முக்கிய குறிப்பு- இந்த படத்தில் ‘ஜிகிர்தண்டா’ பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். எல்லாம் பத்ரியின் அன்புக்கு கட்டுப்பட்டு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னை யாரும் தொந்தரவு பண்ணல… ஹன்சிகா, ராய் லட்சுமி சண்டை பற்றி சுந்தர்சி

அருகிலிருக்கிற படம், பல ஹீரோக்களை ‘அட ங்கொப்புரானே...’ ஆக்கியிருக்கும்! ‘சுந்தர்சிக்கு மச்சம்டா’ என்று மற்றவர்கள் முனகுவதற்கு முன்... இந்த படத்திலிருக்கும் மூவருமே அவருக்கு ஜோடிகள் அல்ல! வினய்யும்...

Close