லிங்கா நஷ்டத்திற்காக பாயும் புலியை முடக்குவது என்ன நியாயம்? திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்!
இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது பாயும்புலி. விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். காத்திருந்து கழுத்தில் பாயும் புலியை போலவே இந்த படம் வெளியீட்டு வேலைகள் ஜரூராக நடந்து வரும் இந்த நேரத்தில் புலியின் கழுத்தை கடித்திருக்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம். லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத் தொகைக்காக வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களை உள்ளடக்கிய என்.எஸ்.சி என்று சொல்லப்படும் ஏரியாவில் பாயும் புலி படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
லிங்காவை வாங்கி விநியோகம் செய்தவர்கள் என்ற முறையில் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை குறி வைத்து எறியும் அம்பு இது என்றாலும், இது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவோம் என்றும் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த கடிதம் இதோ-