பாட்ஷாவை காப்பியடிச்சா கேஸ் போடுவேன்! அஜீத் படத்திற்கு நோட்டீஸ்!

‘தெரியாத்தனமா விக்ஸ் வாங்கிட்டேன். ஜலதோஷமே வா….’ என்பதை விடவும் மோசமாக இருக்கிறது இந்த விஷயம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அஜீத் நடிக்கும் புதிய படத்தின் கதை என்ன? என்பதுதான் மீடியாக்களின் பெருந்தீனி. பிரபல வார இதழ் ஒன்று, இதுதான் தல 56 கதை என்று பாட்ஷா கதையை அப்படியே எழுதப் போக, கதைக்குரியவர்கள் சும்மாயிருப்பார்களா? பொங்கி எழுந்துவிட்டார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது ஆபிசுக்கு வந்த நூற்றுக்கணக்கான கடிதங்களை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அஜீத் படம் எடுக்க ஆரம்பித்த நாளில் இருந்தே அவரது அலுவலகத்திற்கு தினந்தோறும் அவ்வளவு கடிதங்கள் வருகின்றனவாம். ‘தல… எப்படியிருக்காரு? அவர நல்லா பார்த்துங்க’ என்பதில் ஆரம்பித்து, ‘அவர் ஏன் நல்ல கதைகளை செலக்ட் பண்ண மாட்டேங்குறாரு? கொஞ்சம் அட்வைஸ் பண்ணக் கூடாதா?’ என்பது வரைக்கும் ஏராளமான அட்வைஸ்கள். ஆர்வங்கள்.

அப்படிதான் அந்த கடிதத்தையும் பிரித்தாராம் ஏ.எம்.ரத்னம். உள்ளேயிருந்தது வெடிகுண்டு. ‘நீங்கள் தற்போது அஜீத்தை ஹீரோவாக நடிக்க வைத்து தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் கதை, நாங்கள் தயாரித்த பாட்ஷா கதையை தழுவியதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் முறைப்படி அனுமதி பெறாமல் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே விளக்கம் வேண்டும். இல்லையென்றால், முறைப்படி எங்களிடம் அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்ததாம் அதில்.

பாட்ஷா கதைக்கும் தல 56 கதைக்கும் சம்பந்தமேயில்லை. இதுல இப்படியொரு நோட்டீஸ். அதிர்ந்து போன ரத்னம், உடடினயாக சத்யா மூவிசை தொடர்பு கொண்டு, ‘வர்றதெல்லாம் பேக் நியூஸ். நீங்க ஒண்ணும் டென்ஷன் ஆகாதீங்க’ என்றாராம்.

அப்படீன்னா… வேற கதையை யோசிச்சு எழுதிர வேண்டியதுதான் மக்கழே….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உங்க பிரச்சனைதான் என்ன? சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்?

சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான்....

Close