தமன்னா நீட்டிய எக்ஸ்ட்ரா பில்! எல்லாம் அதுக்காக?
தமன்னாவுக்கு தண்ணியில கண்டம் இருக்கோ இல்லையோ? தமன்னா தண்ணியில விழுந்தா தமிழ்நாட்டுக்கே கண்டம்! அழகும் பதுமையுமாக இருக்கிற தமன்னாவுக்கு கழுத்துக் கொள்ளாமல் நகை அணிந்து நடிக்க ஆசையாம். ஆனால் இங்கிருப்பவர்களுக்கு அவர் கழுத்தை சுற்றி மட்டுமல்ல, கழுத்துக்கு கீழே கூட படம் பிடிக்க ஆசை. அதுவும் வேற மாதிரி! ‘முடிந்தவரை பறிச்சிக்கோ…’ என்று பெரும் பசியோடு அவரது ஆடையை குறைத்து நடிக்க வைப்பதால் கல்லா நிரம்பி, தமன்னா என்றால் தனம் தான்யம் என்று பெட்டி கொள்ளாமல் புகழ வைக்கிறது.
இந்த அடங்காத அசுரர்களுக்கு மத்தியிலும் ‘நம்ம ஸ்ரெட்சரை சொல்ற மாதிரியான படங்களில் நிறைய நடிச்சாச்சு. இனிமே நடிப்புல பேர் சொல்ற மாதிரி சில படங்களை ச்சூஸ் பண்ணுவோம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். இந்த நேரத்தில்தான் தெலுங்கில் அவர் நடித்த ‘ஆகடு’ படம் அவர் நினைத்த மாதிரி அமைந்ததாம். இந்த படத்தில் இன்னொரு முக்கிய பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அது?
காஸ்ட்யூம் டிசைனர் மாதிரி, நகை டிசைனர்! அவர் ஆசைப்பட்ட மாதிரி ஒரு காட்சியில் கழுத்துக் கொள்ளாத நகையோடு வருகிற கேரக்டராம். தான் அணிய வேண்டிய நகைகளை எல்லாம் நானே டிசைன் பண்ணிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தாராம் தமன்னா. அதுமட்டுமல்ல, விதவிதமான படங்களை வரைந்து நகை அலங்கார நிபுணரையும் படுத்தி எடுத்திருக்கிறார்.
‘சின்ன வயசிலேயே அவ இப்படிதான். ஏதாவது நகைகளின் படமா வரைஞ்சு தள்ளிகிட்டு இருப்பா. இப்போ அதையே சினிமாவுக்காக செய்யுறா… பெருமையா இருக்கு’ என்கிறாராம் தமன்னாவின் தாத்தா. அது கிடக்கட்டும்… ஆகடு வுக்காக வாங்கிய சம்பளத்துடன் எக்ஸ்ட்ராவாக ஒரு பில்லையும் நீட்டிவிட்டாராம் தமன்னா. இது நகை டிசைன்ஸ் பணிக்காக!
எந்த மயிலும் வெட்டியாக தோகை விரிப்பதில்லை! ஆகடு ரிசல்ட் எப்படி? ஆந்திராவில் கேட்டால்தான் தெரியும்.