கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? தமன்னாவும் ஒரு ப்ரண்ட்லி ஷோவும்!
‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?’ என்று சந்தானத்தோடு சலம்பிய கார்த்திக்கு அதற்கப்புறம் வந்ததெல்லாம் லட்டும் இனிப்பும்தான். கொம்பன் வந்து பேய் ஹிட் அடித்த பின், கார்த்தியின் ரசிகர்கள் அவரது படத்திற்காக காத்திருந்து காத்திருந்து ஓய்ந்த நேரத்தில் இன்னொரு லட்டோடு வந்துவிட்டார் மனுஷன். இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகும் தோழா, எல்லார்க்குமான லட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? படத்தில் தமன்னா இருக்கிறாரே?
பையா, சிறுத்தை என்று தமன்னாவும் கார்த்தியும் ஜோடியாக நடித்த படங்கள் எல்லாம் பேய் ஹிட்டடித்த வரலாறுகள் இங்கே உண்டு. அந்த ஒரு காரணத்திற்காகவே இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். பொதுவாகவே தனது பட ஸ்கிப்ட்டுகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கார்த்தி. தோழாவில் இவருக்கு அப்படியொரு கேரக்டர். கூடவே நாகார்ஜுனாவும் இணைந்து கொள்ள, ஆந்திரா தமிழ்நாடு என்று இரு மாநில ரசிகர்களையும் ஏகத்திற்கும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது தோழா.
இது டப்பிங் படமா இருக்குமோ, அங்க எடுத்து இங்கே மேட்ச் பண்ணியிருப்பாங்களோ… என்றெல்லாம் கடலை கொறித்த கனம் வெட்டியாபிசர்ஸ்களுக்கு சரியான மொத்து. என்ன தெரியுமா? இந்த படத்திற்கு தமிழக அரசு மனமுவந்து வரிவிலக்கு கொடுத்திருக்கிறது. நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே இந்த சலுகை உண்டு. படத்தை பார்த்த வரிவிலக்கு குழு, ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளியது தனிக்கதை.
அப்படியே ஒரு அதகள ரகசியம். இப்படம் வெளியாகும் நாளில் சென்னைக்கு வந்து கார்த்தி அண்டு படக்குழுவினருடன் தியேட்டரில் படம் பார்ப்பதாக கூறியிருக்கிறாராம் தமன்னா. டார்க் இருட்டில் எங்காவது பளிச் மின்னல் அடித்தால், தியேட்டருக்குள் தமன்னா இருக்கிறார் என்று முடிவு பண்ணிக்கோங்க மக்கள்ஸ்…