தமன்னா ராக்ஸ்… வலையில் விழுந்தார் ஜீவா!
கோடிட்ட இடத்தை நிரப்பியே தீருவது என்று ரீ என்ட்ரி அடித்திருக்கிறார் போலிருக்கிறது! தமன்னாவின் வேகம் சக ஹீரோயின்களின் இதய சூட்டை இன்னும் இன்னும் ஹீட்டாக்கி வருகிறது. பின்னே என்னவாம்? தமிழ்சினிமாவில் டாப்பில் இருந்த நேரத்திலேயே திடீரென காணாமல் போனார் தமன்னா. வா… வா… என்று இங்கிருந்து அழைப்புகள் போனாலும், எல்லா அழைப்புகளும் பூமராங் போல திரும்பி வந்ததுதான் சந்தேகம். எப்படியோ? அவரை மீண்டும் அழைத்து வந்தது பாகுபலி. அது டப்பிங் படம்தான் என்றாலும், நேரடி தமிழ் படம் போலவே மனசுக்குள் நுழைந்தபடியால், மீண்டும் கோடம்பாக்கத்தில் கொய்யா விளைச்சல்! யெஸ்… தமன்னாவே மனசு வந்து ஒட்டிக் கொண்டார் சென்னையில்.
தர்ம துரை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா இப்போது ஜீவாவுடன் ஒரு படத்தில் இணைய ‘சைன்’ பண்ணியிருக்கிறார். சம்பளம் நிச்சயம் ஜீவா வாங்குவதை விட ஜாஸ்திதான். இந்த படத்தை அநேகமாக ஈட்டி, மிருதன் படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பார் போல தெரிகிறது. திருநாள் படத்தில் நயன்தாரா, போக்கிரிராஜா படத்தில் ஹன்சிகா, இந்த புதிய படத்தில் தமன்னா என்று தினம் ஒரு குளூக்கோஸ் பாக்கெட்டை தீர தீர கரைத்துக் கொண்டிருக்கிறார் ஜீவா.
கோடம்பாக்கத்துல புகை வருதா பாருங்க…?
பாகுபலி டப்பிங் படமா ? அந்தணன் சாருக்கு கண்ணு தெரியல போல.. லிப் சிங்க முதல்ல கவனிச்சுட்டு வாங்க பாஸ்..