நிஜமாகவே கிழிந்த தாரை தப்பட்டை?! சசிகுமார், பாலா நடத்தும் பிப்டி பிப்டி ஆட்டம்!
எந்நேரத்தில் ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்தார்களோ? மாதங்கள் உருள உருள மத்தளத்தின் தோல் பிய்ஞ்சுரும் போலிருக்கே என்று கவலைக்கு ஆளாகிவிட்டாராம் சசிகுமார். சுமார் ஏழு கோடி வரைக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டில் சொல்லும்படியான இயக்குனராகவும் நடிகராகவும் இருந்த சசிகுமார் எப்போது குருவே தன்னை அழைக்கிறார் என்று சந்தோஷப்பட்டாரோ? அன்று ஆரம்பித்த பெருமூச்சுதான். இன்று ஹார்ட்டுக்குள் கபடி ஆடுகிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது.
திடீரென ஷுட்டிங் நிறுத்தப்பட, அது மீண்டும் எப்போது துவங்கும் என்பதே தெரியாத நிலைமை. எல்லாவற்றுக்கும் காரணமாக சொல்லப்பட்டது மிஸ்டர் எம் தானாம். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாராம் சசி. ‘இந்த படத்தின் தயாரிப்பு பொறுப்பை நானே எடுத்துக்குறேன். நீங்க டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க’ என்று பாலாவிடம் கூறியிருக்கிறார். இரு தரப்பு பேச்சு வார்த்தை இறுதி முடிவுக்கு வந்ததாகவும், மீதி படத்தை முடிக்கும் பொறுப்பை பாலா சசியிடம் மனமுவந்து ஒப்படைத்துவிட்டதாகவும் காதை கடிக்கிறது கோடம்பாக்கம்.
சசிகுமார் வந்ததும் சிக்கனமும் தலை தூக்கியிருக்கிறதாம். படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறுவதாக முன்பு முடிவு செய்திருந்தார்கள். இப்போது அந்தமான் சங்கதிகள் அத்தனையும் தேனி பகுதியிலேயே படமாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இங்கிருந்து அந்தமான் போவது போல காட்சியமைக்க வேண்டிய ஒரு கப்பலை மட்டும் வாடகைக்கு அமர்த்தியிருக்கிறார்களாம்.
எப்படியாவது இந்த படத்தை முடித்துவிட்டு, சரியோ, தப்போ… கோடம்பாக்கத்தில் மற்ற ஹீரோக்களின் ஓட்ட பந்தய மைதானத்தில் தானும் குதித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறாராம் சசி. அதற்காக….
சசி செய்ததுதான் சரி!