தாரை தப்பட்டைக்கு ஏ! 18 இடங்களில் கட்?

“ஏனென்றால் சப்ஜக்ட் அப்படிங்க?” என்கிறது ஏ-ரியா! ஒரு கரகாட்டக்காரிக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் நடுவேயிருக்கும் லவ்தான் கதை. ஏற்கனவே தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நாம் பார்த்த லவ்தான் இந்த படத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஊரே ஒரு மாதிரி சிந்தித்தால், பாலாவின் மூளைக்குள் மட்டும் வேறொரு ரசவாதம் நடந்திருக்கும். ஆக, தாரை தப்பட்டை வேறொன்றை சொல்லும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

கரகாட்டம் என்பதே நள்ளிரவு ஆட்டம்தானே? ஊர் அடங்கி, குழந்தை குட்டிகளெல்லாம் தூங்கிய பின் தெரு தெருவாக ஆடிக்கொண்டே வருவார்கள். அவர்கள் பேசும் சில டயலாக்குகள் கூடியிருக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயாக்ராவை ஊட்டி ஊட்டி வீட்டுக்குள் அனுப்பும். இப்படி கால காலமாக நடந்து வரும் வழக்கத்தை இந்த படத்தில் பாலா எப்படி கையாண்டிருப்பார்?

அதைதான் லேசு பாசாக உணர்த்தியிருக்கின்றன மேற்பட் கட்டுகள்! சென்சார் அமைப்பினர் சில வசனங்களை நீக்க சொல்லி கேட்டார்களாம். அப்படி நீக்கினால் படத்திற்கு யு சான்றிதழ் தருவதாகவும் சொன்னார்களாம். பாலாதான் பிடிவாதமாக, ஒரு இடத்திலும் கை வைக்க விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். வேறு வழியில்லாமல் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிவிட்டார்கள். அப்படியிருந்தும் 18 இடங்களில் கட் என்கிறார்கள். இந்த கட்டுகள் அத்தனையும் காட்சியிலிருந்த ஆபாசத்திற்காக.

நிலைமை ஓரளவு ‘கட்’டுக்குள் அடங்கிவிட்டது. இருந்தாலும் படம் பார்க்கிற ரசிகர்களுக்கு விட்டு விட்டு கொதித்தால் அதற்கு சென்சார் மட்டும் பொறுப்பல்ல!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாடு விடிஞ்சாப்லதான்! மலேசியாவிலிருந்து ஒரு கட்டை?

“இருக்கறதுகளே துணிய கிழிச்சிகிட்டு அலையுதுங்க... இதுல மலேசியாவுலேர்ந்து வேற இறக்குமதி பண்ணிட்டீங்களா? நாடு விடிஞ்சாப்லதான்!” என்று அரை கண்ணை மூடிக் கொண்டே கீழ்வரும் ஸ்டில்களை ரசிக்கும் சமூகப்...

Close