மாச்சர்யம் மறைந்தது! ஆச்சர்யம் பிறந்தது! அதாண்டா நடிகர் சங்கம்!!
கடந்த சில தினங்களுக்கு முன் விஷால், மற்றும் நாசர் உள்ளிட்டோர் தலைமையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அங்குதான் சில ஆச்சர்யங்கள் அரங்கேறின. நடிகர் சங்கத்தில் விறுவிறுப்பான தேர்தல் வருவதற்கு முதல் காரணமாக இருந்தது ராதாரவியும் அவரது காரம் தடவிய டங்க்கும் என்றால், விஷாலை மேலும் தரக்குறைவாக திட்டியவர் சங்கத்தின் பொறுப்பில் இருந்த மூத்த கலைஞரான கே.என்.காளை.
நாவினாற் சுட்ட வடுவை வெற்றியை கொண்டு அழித்துக் கொண்டார் விஷால். ஆனால் சுட்ட அந்த தீப்பந்தத்தை என்ன செய்வது? சம்பந்தப்பட்ட ராதாரவியும், காளையுமே அந்த நெருப்பை தணித்துக் கொண்டார்கள் அன்றைய தினம்! கே.என்.காளை நேரடியாக ஸ்பாட்டுக்கு வந்து வரிசையில் நின்று தனக்கான அன்பளிப்பை பெற்றுக் கொண்டார். இது அங்கிருந்த அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.
அதற்கப்புறம் ராதாரவி? அடிப்படையிலேயே செல்வந்தராக இருந்தாலும், சங்கம் கொடுக்கும் உதவிப் பொருட்களை வாங்குதில் மரியாதை குறைவில்லை என்று நினைத்திருக்கலாம். தனது மகனை அனுப்பி அந்த பொருட்களை வாங்க வைத்திருக்கிறார்.
இது குறித்து பொன்வண்ணன் கூறியிருப்பதென்ன?
மூத்த கலைஞர்… நாடக கம்பெனி நடத்தியவர்… பல வருடங்கள் நடிகர் சங்கத்தில் பொறுப்பில்இருந்தவர் கடந்த தேர்தலில் நம்மை மிகப்பெரிய அளவில் விமர்சித்தவர்- திரு. காளைஅண்ணன்அவர்கள் ஆனால் நடிகர் சங்க நிவாரணத்தை உறுப்பினர்களோடு ஒருவராக வந்து நின்று “ஈகோ’ பார்க்காமல் வாங்கியதை கண்டு நான் அவருக்கு பெரிய சல்யூட் அடித்து மதிக்கிறேன் ! ஆத்மார்த்தமாக உதவும் மனதுடன் வந்துள்ள நம்மை தடுக்காத அனைவரையும் நாம் மதிப்போம்! என்று கூறியிருக்கிறார்.
வட துருவமும் தென் துருவரும் இணைந்தால் அது ஆச்சர்யம்தானே?
//கே.என்.காளை நேரடியாக ஸ்பாட்டுக்கு வந்து வரிசையில் நின்று தனக்கான அன்பளிப்பை பெற்றுக் கொண்டார். இது அங்கிருந்த அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.//
//அதற்கப்புறம் ராதாரவி? அடிப்படையிலேயே செல்வந்தராக இருந்தாலும், சங்கம் கொடுக்கும் உதவிப் பொருட்களை வாங்குதில் மரியாதை குறைவில்லை என்று நினைத்திருக்கலாம். தனது மகனை அனுப்பி அந்த பொருட்களை வாங்க வைத்திருக்கிறார்.//
அவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் வறிய நிலையில் இருக்கிறார்களா இல்லையா? இல்லைனா இந்த வெட்டி பில்டப் எதுக்கு?
லூசுப் பசங்க.