நரிக்குறவர்கள் வாழ்க்கையை பற்றிய படம் “ வேதபுரி “


மேடின் இந்தியா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் “ வேதபுரி “ இந்த படத்தில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக தேவதா, யோகா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கராத்தே ராஜா, பைரவ், லொள்ளுசபா மனோகர், தினா, பாஸ்கர் சீனிவாசன், ஜெகன், ஜே.பி.ஆர், பேபி நிலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – விமல்முருகன்
இசை – சுரேஷ் ஷர்மா
பாடல்கள் – வெங்கட், சிவராமன்
கலை – ஆதவன்
எடிட்டிங் – ஆர்.ஜி.தங்கராஜ்
ஸ்டன்ட் – M.M.A. சரவணன்
நடனம் – சரவணன், ஷாஜகான்
இணை தயாரிப்பு – M.M.A. சரவணன்
தயாரிப்பு – பாஸ்கர் சீனிவாசன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அக்னி ஆதவன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது ஒரு கமர்ஷியல் திரில்லர் படம். நரிக்குறவர் வம்சத்தை சேர்ந்த நாயகன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். வேதபுரி என்ற ஊரில் தஞ்சம் அடைகிறார்கள். அப்போது அந்த ஊரில் நடக்கும் அசம்பாவிதம் மூலம் அவர்கள் குற்றம் சுமத்தப் படுகிறார்கள். அதனால் ஊர்காரர்கள் அவர்களை விரட்டி அடிகிறார்கள். இறுதியில் நரிக்குறவர்கள் அந்த பிரச்சனையை எப்படி சமாளித்து வெற்றி கண்டார்கள், தங்கள் மேல் சுமத்திய பழியை எப்படி போக்கினார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. 44வருடங்களுக்கு பிறகு முழுக்க முழுக்க நரிக்குறவர்கள் நடித்திருக்கும் படம் இது. அவர்கள் எங்களுக்கு அவர்களது பாஷையை சொல்லிக்கொடுத்து நிறைய உதவிகளை செய்தார்கள் அவர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
SAVARAKKATHI Teaser 2

https://www.youtube.com/watch?v=8hPV3jOeAOo&feature=youtu.be  

Close