சினிமா ஓடணும்னா இதுதான் வழி! கேட்கும்போதே நெஞ்சுவலி வருதே?

தொழிலதிபராக இருந்து சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ஆர்கே! பரதேசி, ஜில்லா படங்களில் வில்லனாக நடித்தார். அதுமட்டுமல்ல, இதுவரை நாலைந்து படங்களை சொந்தமாக தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தார், இவ்வளவு முன் பலம் இருந்தும் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வந்த வக்கீல் வண்டுமுருகன் மூலமாகதான் ஆர்கேவை அறிந்து கொண்டது தமிழகம்.

வடிவேலுவுக்கே சம்பளம் கொடுத்த முதலாளியாக இருந்தாலும், அந்த மரியாதையையெல்லாம் அவருக்குக் கொடுக்காமல் வகைதொகையில்லாமல் கதற விட்டார்கள் ரசிகர்கள்? சினிமா வியாபாரத்தை சீர்திருத்தவில்லை என்றால், கொட்டுன கோடிகளுக்கு குழாபுட்டுக் கூட மிஞ்சாது என்பதையெல்லாம் அவருக்கு வெகு சீக்கிரமே புரிய வைத்தார்கள் அவர்கள். இனி ஒரு படம் எடுத்தால், அதை ஓட வைக்க என்ன செய்வது? அதிரிபுதிரியாக ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் ஆர்.கே.

சினிமா ஊமைப்படமா இருந்து பேசும் படமா மாறி மெல்ல மெல்ல முன்னேறி டிஜிட்டல் யுகத்துக்கு வந்துருச்சு. ஆனாலும் ஆரம்ப காலத்துல ஒரு வியாபார முறை இருந்ததல்லவா? அதைதான் இன்னமும் ஃபாலோ பண்ணுது. ஏர்டெல் ஏர்செல் சிம் விக்கிறவங்க கூட நாடு முழுக்க லட்சக்கணக்கான முகவர்கள் வச்சுருக்காங்க. ஆனால் கோடி கோடியா கொட்டி படம் எடுக்கிற சினிமாவுலகம், மொத்த தமிழ்நாட்டுக்கும் பத்தே பத்து விநியோகஸ்தர்தான் வச்சுருக்கு. இதை உடைக்கணும்.

தமிழ்நாடு முழுக்க ஆயிரம் விநியோகஸ்தர்களை உருவாக்கப் போறேன். என் படத்தின் ஆயிரம் டிக்கெட்டை விற்றால், 100 டிக்கெட் காசை நீ எடுத்துக்கோன்னு சொல்லப் போறேன். விரைவில் வெளிவர இருக்கும் என்னோட ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தை அப்படிதான் தமிழ்நாடு முழுக்க வியாபாரம் பண்ணப் போறேன் என்றார். அதாவது தியேட்டரில் படம் ஓடும். அதே தியேட்டரை சுற்றி லாட்டரி டிக்கெட் மாதிரி சினிமா டிக்கெட் தாரளமாக கிடைக்கும். வீடு வீடாக வந்து விற்பார்கள். இதில் குடும்பத்தோடு வந்தால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற சலுகை வேறு உண்டாம்.

தீபாவளி பொங்கல்னா ஜவுளிக்கடையில் தள்ளுபடி தர்றாங்க. மளிகைக்கடையில் தள்ளுபடி தர்றாங்க. மொபைல் போன் ரேட் குறையுது. ஆனா சினிமா டிக்கெட் மட்டும் ஆயிரம் ஐநூறுன்னு ஏறுதே? அதை சரி பண்ண வேண்டாமா? அப்புறம் எப்படி தியேட்டர்ல கூட்டம் வரும் என்கிறார் ஆர்கே.

கேள்வி நியாயமாதான் இருக்கு! ஆனால் கிறுக்குப்பய உலகத்துல எது சரியா நடக்குது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி! அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி?

கமல்ஹாசன் மகள் என்பதாலேயே படப்பிடிப்பில் சற்று அதிகப்படியாக விலகி நின்ற அஜீத், படத்தில் மட்டும் வழிய வழிய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்திருக்கிறாராம். ஸ்ருதிஹாசனுக்கு லாயர் வேஷம். ஆனால்...

Close