பூசணிக்காய் உடைச்சாச்சு! தெறி ஷுட்டிங் ஓவர்

என்னது… தமிழ்நாட்ல இவ்ளோ மேட்டரு நடந்துருச்சா, நமக்கு தெரியாம போச்சே? என்று விஜய் ஆச்சர்யப்பட்டாலும் நம்பிட வேண்டியதுதான். ஏனென்றால், தமிழ்நாட்டை உலுக்கி வரும் பீப், ஜல்லிக்கட்டு எது பற்றியும் கவலைப்படவில்லை அவர். தெறி… தெறி… தெறி… என்று தெறிக்க தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார். நடுவில் இந்த எமியால் வேறு எக்கச்சக்க பிரச்சனைகள். ஷுட்டிங்குக்கு ஒழுங்காக வருவதில்லை. பிளைட்டை தவற விட்டுட்டேன் என்று காரணத்தை சொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருக்க, அவரையும் அரவணைத்துதான் இவ்ளோ பெரிய படத்தை எடுத்து முடித்திருக்கிறார் அட்லீ.

பொங்கல் திருநாளான நேற்றோடு தெறி ஷூட்டிங் ஓவர். அதுவும் குளிரடிக்கும் லடாக் பிரதேசத்தில் நடந்தது படப்பிடிப்பு. நேற்று மாலை எல்லா காட்சிகளையும் எடுத்து முடிச்சாச்சு என்கிற சிம்பலை ஊர் உலகத்திற்கு அறிவிக்கும் பூசணிக்காய் உடைக்கும் வைபவம்.

விஜய், எமி, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அத்தனை பேரையும் நிற்க வைத்து பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டிக் கழித்து போட்டு உடைத்துவிட்டார்கள். இனிமேல் படத்தின் பின் பாதி வேலைகள்தான். இதற்கப்புறம் பரதன் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய், நடுவில் வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். அதற்காக நேரம் ஒதுக்குவார் என்கிறார்கள்.

இப்பவாச்சும் அந்த பீப் பாடலை கேளுங்க சார்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி?

தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த...

Close