உத்தம வில்லன் தந்த பாடம்! தூங்காவனத்தில் சமன் செய்த கமல்?

பக்கம் பக்கமான கட்டுரைகளை படிக்க முடியாமல் திணறுவதை விட, ‘டிட் பிட்ஸ் இருக்கா’ என்று தேடுகிற கண்கள்தான் அதிகம். இங்கே சம்பூர்ண ராமயணம் மாதிரி ரெண்டு நாளைக்கெல்லாம் தொடர்ச்சியாக படம் ஓட்டினால், சம்பந்த டைரக்டரை இன்டஸ்ரியை விட்டே விரட்டிவிடுவார்கள் ரசிகர்கள். இங்கு மூன்று மணி நேரம் படம் எடுத்து அதையும் வலிய வந்து வாயில் திணிக்கிற டைரக்டர்களுக்கு கிழிஞ்ச அம்பர்லாவை கொடுத்து நனைய நனைய தும்மல் போட வைப்பதுதான் ரசிகர்களின் வாடிக்கை.

ஆனால் இந்த லாஜிக்கிலிருந்து தப்பிய படங்களின் சமீபத்திய வரிசையில் கம்பீரமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறது பாபநாசமும், தனி ஒருவனும். இருந்தாலும் எல்லா நேரத்திலும் செல்லுபடியாகதா வில்லங்கம் இது. இதே கமல் நடித்த உத்தம வில்லன் ஏறத்தாழ மூன்று மணி நேர படம். ரசிகர்கள் கமல் வரும் அந்த நாடக காட்சிகளில் எல்லாம் குப்புறடிச்சு உறங்கியே இருந்தார்கள். அந்த படம் தந்த படிப்பினையோ என்னவோ?

தூங்காவனம் படத்தை சரியாக ஒன்றே முக்கால் மணி நேரத்தில் முடித்துவிட்டாராம் கமல். க்ரைம் திரில்லர் வகை படம். குழந்தை திருட்டை மையமாக கொண்ட படம் என்பதால், எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையக் கூடாது என்று நினைத்திருக்கலாம். இருந்தாலும் கமலின் இந்த நல்ல முடிவுக்கு நாலு தேங்காயை சூடம் வச்சு கொளுத்தி சுற்றி வந்து உடைக்கலாம்.

Read previous post:
அஜீத் விஜய்… அப்புறம் பிரசாந்த்! பிரபல இயக்குனர் எவிடென்ஸ்!

பிரசாந்த் வீட்டு காலண்டரில் மட்டும் இருபது வருஷத்துக்கு முந்தைய தேதியை கிழிக்காமலே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்பாவும் மகனும் அதே வயசோடு அதே துடிப்போடு இருப்பதை ஆயிரமாவது முறை...

Close