இசையுலகில் ஷேக் ஷேக்… கேபிள் டீம் பராக் பராக்!
கேபிள் சங்கர் சாதித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். விமர்சன உலகில் கேபிளுக்கு இருக்கும் மரியாதை அனைவரும் அறிந்ததுதான். எந்தவொரு படத்தையும் தட்டி பதம் பார்க்க துடிக்கும் அவரது எழுத்து. ‘அவரே படம் இயக்குகிறார். ரிசல்ட் என்னாகுமோ என்று அவரது ரசிகர்கள் கவலையோடு காத்துக் கொண்டிருக்க, ‘பில்டிங்கும் ஸ்டிராங்கு, பேஸ்மென்ட்டும் ஸ்டிராங்கு’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அவர்.
சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருக்கும் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் முதல் பாடல், இணைய உலகில் மட்டுமல்ல, இசையுலகையும் ஒரு ஷேக் ஷேக்கியிருக்கிறது. வொய் திஸ் கொலவெறிக்கும், டார்லிங் டப்பக்குக்கும் செம டஃப் கொடுக்கிற மாதிரி ஒரு பாடல் அது. ‘யாருக்கும் இறக்கம் இல்ல பாஸு பாஸு எல்லார்க்கும் வேல வெட்டி இருக்குதாம்பா பாஸு பாஸு ’ என்று துவங்கும் அந்த பாடல் வரிகள், ஏதோ ட்யூனுக்குள் போய் உட்கார்ந்து கொண்டால் போதும் என்கிற அளவுக்கு இல்லை. மாறாக இந்த சமூகத்தையும், அதன் போக்கையும் அப்படியே வெளுத்துக் கட்டுகிறது.
ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய தார்மீக பொறுப்புணர்வோடு இந்த பாடலை உருவாக்கியிருக்கும் கேபிள் சங்கருக்கும், அந்த பாடலை உருவாக்கியிருக்கும் இசையமைப்பாளர் பி.சி.சிவனுக்கும் பாடியிருக்கும் ஆன்ட்டனி தாசனுக்கும் எழுதிய கார்க்கி பவாவுக்கும் வண்டி வண்டியாக பாராட்டுகள் குவியும்.
எடுத்த எடுப்பிலேயே வெற்றியை தொட்டிருக்கிறார் கேபிள். …தொடரும் என்பதில் சந்தேகமில்லை! பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும் . https://wh1049815.ispot.cc/thottal-thodarum-song/