அப்படின்னா அஜீத் தமிழனில்லையா? டி.ராஜேந்தர் பேச்சால் சலசலப்பு?

அவரு நல்லவருன்னு சொன்னா, அப்ப நான் கெட்டவனா? என்று கேட்கிற காலம் இது. நீயும் நல்லவன்தான் என்றொரு பதில் வரும் வரைக்கும் மனப்போராட்டமும், மானப் போராட்டமுமாக அல்லாடி தள்ளாடி செத்தே போய்விடுகிற குணம் தமிழனுக்கு உண்டு. அப்படிதான் கடந்த இரண்டு நாட்களாக அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது அஜீத் ரசிகர்கள் வட்டாரம்.

நாங்க அப்பவே சொல்லல? நம்பி கெட்டுச்சாம் தவளை… நசுங்கி உருண்டுச்சாம் குவளைன்னு முடியுற விஷயம்தான் இதுன்னு? https://wh1049815.ispot.cc/a-new-whats-app-from-simbu/ சிம்புவின் வாலு படத்தை எப்படியாவது அஜீத் ரசிகர்கள் வெற்றி படமாக்கிடணும். முதல் நாளே முதல் ஷோவே பார்த்துடணும் என்றொரு சுற்றறிக்கை அஜீத் ரசிகர்களிடம் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அநேகமாக தமிழகத்திலிருக்கும் எல்லா ரசிகர் மன்றத்தினருக்கும் அது போய் சேர்ந்திருக்கும். படத்திற்கு படம் அஜீத் அஜீத்… என்று வாய் மணக்க பேசிய சிம்பு கடந்த இரண்டு நாட்களாகவே கப்சிப். ஏன்?

விஜய் தரப்பிலிருந்து சுமார் 7 கோடி வரை சிம்புவின் வாலு படத்திற்கு உதவி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதையடுத்துதான் புலி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் டி.ராஜேந்தர். அங்கு அவர் பேசிய பேச்சின் அனல் இன்னும் சூடாக அடித்துக் கொண்டேயிருக்கிறது. என் மகன் சிம்பு வேறொரு நடிகருக்கு ரசிகன். ஆனாலும் ஓடி வந்து உதவி செஞ்சது விஜய்தான். ஏன்னா விஜய் தமிழன்… என்று கூறியிருந்தார் அவர். அதை பிடித்துக் கொண்டுதான் விவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறது அஜீத் ரசிகர்கள் வட்டாரம்.

அஜீத் உதவி செய்யலே என்பதைதான் அப்படி குத்திக் காட்டுகிறாரா டி.ராஜேந்தர்? இதற்குப்பிறகும் சிம்பு அமைதியாக இருப்பதில் நியாயமில்லை. அவர் ஏதாவது பேச வேண்டும் என்கிறார்கள். சிம்பு என்ன பேசுவாரோ?

1 Comment
  1. சிவசுப்பிரமணியம் says

    சந்தேகமில்லை. அஜித் ஒரு மலையாளி தான்.
    இல்லை என்றால் மறுக்கட்டுமே !!!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நல்ல விதைகள் தானாக முளைத்துக் கொள்ளும்!

நல்ல விதைகள் தானாக முளைத்துக் கொள்ளும் என்பதற்கு கே.பி.செல்வா, நவீன் முத்துசாமி இருவரும் நல்ல உதாரணமாக இருப்பார்கள். இவர்கள் இயக்கியிருக்கும் குறும்படம் நம்மை அப்படிதான் நினைக்க வைத்தது....

Close