போகாத போகாத எம் புள்ளையே! மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உருக்கமான அறிக்கை

கல்யாண வீட்டில் மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு கிளம்பியது போல கிளம்பியிருக்கிறார் சிம்பு. அவரை போகாதே போகாதே… என்று நடிகர் சங்கத்திலிருக்கும் எல்லாரும் பின்னால் நின்று பிடித்திழுக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். ஆனால் ஐயகோ.. ரிசல்ட் ரொம்ப மந்தம்!

ம்ஹும் முடியாது என்று அங்கொன்றும் இங்கொன்றும் குரல்கள் கேட்டதே ஓழிய பெரிசாக வருத்தங்கள் இல்லை. ஒரு பேச்சுக்கு சொன்னா, குழியில தள்ளிட்டுதான் மறுவேலை பார்ப்பானுங்க போலிருக்கே என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். வீட்டின் அடுத்த ரூமிலிருக்கும் சிம்புவிடம் கதவை தட்டி சொல்ல வேண்டிய விஷயத்தையெல்லாம் ஒரு அறிக்கையாக தயாரித்து நாட்டு மக்களுக்கு விநியோகித்திருக்கிறார் அடுக்குமொழி ஆசான் டி.ஆர்.

தன் அப்பாவே தன்னை கூப்பிட்டு நேரில் சொல்லியிருந்தால், சர்தான்ப்பா… என்று கேட்டிருப்பார் சிம்பு. இப்போது அறிக்கையாக வந்துவிட்டதல்லவா? என்ன செய்யப் போகிறாரோ? இருந்தாலும் டிஆரின் அந்த அறிக்கை வாசகர்களின் பொழுதுபோக்குக்காக இங்கே-

1 Comment
  1. roja says

    பீப் சாங் பாடுனதுக்கு தான்டா பிரச்சனை
    அத எப்டி நீ வெளியிட்ட ன்னு
    இங்க பிரச்சனையேயில்லை

    இன்னமும் அதையே பேசிட்டு இருக்கான்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தியேட்டர் கொள்ளை! திருந்தணும் உடனே!! தயாரிப்பாளரின் பேச்சால் சலசலப்பு

பொதுவிழாக்களில் நியாயமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் பட் பட்டென்று பேசிவிடுகிற ‘கோப’சாமிகளில் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தில்லுதான் பேக்ரவுண்ட்! சொல்லுதான் ட்ரூ பிரண்ட்! என்று எப்போதும் சூடும்...

Close