கயல் ஆனந்திதான் ஜி.வி.பிரகாஷுக்கு நயன்தாரா?


Cameo films நிறுவனம் சார்பில் சி .ஜே . ஜெயகுமார்  தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லன்ன நயன்தாரா’ படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். 22ஆம் தேதி துவங்க உள்ள  இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஜி .வி .பிரகாஷ் கதாநாயகனாக  நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ படத்தின் நாயகி ஆனந்தி நடிக்கிறார்.

பல்வேறு இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணி புரிந்த ஆதிக் ரவிசந்திரன் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல்வேறு வெற்றி  படங்களுக்கு ஒளிபதிவாளராக  பணியாற்றிய ரிச்சர்ட் எம் நாதன் இந்த படத்தில் ஒளிபதிவாளர் ஆக பணியாற்றுகிறார். ஜி வி பிரகாஷ் குமார் மிக அருமையான பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்.சமீபத்திய வரவுகளில் மிகவும் நேர்த்தியான பட தொகுப்பாளர் என போற்ற படும் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.உமேஷ் குமார் அரங்கமைக்க,ஷேரிப்ப் நடனம் அமைக்க, ஹரி தினேஷ் சண்டை காட்சிகள் அமைக்க, சுப்பு.N . நிர்வாக தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார்.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்த ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின்  தயாரிப்பாளர் ஜெய குமார் கூறும் போது ‘ இந்தக் கதையை நான் கேட்கும் போதே இந்த படம் ரசிகர்கள் இடையே எவ்வளவு வரவேற்பு பெறும் என்பதை நிர்மாணித்துக் கொண்டேன்.இப்போதைய தமிழ் சினிமாவில் ஜி வி பிரகாஷ் குமார் அளவுக்கு இந்த பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்தி இருப்பார்களோ தெரியாது.கதாநாயகனாக அவரது முதல் படமான ‘டார்லிங்’ வெற்றிப் பெற்றது எங்களுக்கு கூடுதல் பலமாகும் ‘கயல்’ மூலமாக ஆனந்தி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தில் அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.

இந்த படம் அவரை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டும்.. குறுகிய கால தயாரிப்பான ‘த்ரிஷா இல்லன்னா  நயன்தாரா’ இளைஞர்களை கவரும் படம் என்பதில் சந்தேகம் இல்லை’என்றார். .

 
 
Trisha illana Nayanthara
 
Cameo films commenced their second production titled ‘Trisha illana Nayanthara’ in Chennai recently.The shooting is all set to happen from 22nd of January. G.V.Prakash kumar basking in the glory of the success of ‘Darling’ plays the lead. Anandhi who had attracted with her simple but elegant looks plays opposite him  .Adhik Ravichandran who had earlier associated many directors makes his debut as a director. Richard M Nathan who had mantled cinematography for many successful films is the cinematographer of this film.G V Prakash kumar apart from playing the Hero role is also assigned the responsibility of Music .Rueben with his fast raising stature of being the Editor for the future is the editor. Umesh Kumar is the art director, sheriff is the choreographer,Hari Dinesh is the Stunt Director,and Subbu.N is the executive producer of the film.The producer Jayakumar had a few points to share with.’ The moment Adhik narrated the script i was confident on the out come. In my assumption G V Prakash Kumar  will be the perfect choice to play the Hero ‘Darling’ success is a major booster to his career as well as this film .Anandhi who had attracted one and all with her charming roles plays the heroine. She will be seen in an entirely different dimension in ‘Trisha illana Nayanthara’ . This will move in a rapid pace and we are confident that this film will attract youngsters.  .        

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர் – அறிமுக நடிகை சர்டிபிகேட்

பார்வதி நாயர் மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி...

Close