இலங்கை பணத்தில் விழா? கலந்து கொண்டார் த்ரிஷா!

கனடா போயிருக்கிறார் த்ரிஷா. போகட்டுமே… அதிலென்ன வந்தது? என்பவர்களுக்கு போன விஷயம் என்ன, அதனால் ஏற்பட்டிருக்கும் அடிதடி விபரம் என்ன? என்பதுதான் கட்டம் கட்டி தெரிவிக்க வேண்டிய செய்தி.

பொதுவாகவே உலகம் முழுக்க விரிந்து பரந்திருக்கிறார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். இலங்கையின் இனப்படுகொலை உச்சத்தை தொடுவதற்கு முன்பே தேன்கூட்டில் கல்லெறிந்ததை போல உலகின் எல்லா திசைகளுக்கும் பறந்து போன இவர்கள் தேனி போலவே சுறுசுறுப்பாக உழைத்து சென்று சேர்ந்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கிற மாதிரி அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து வருகிறார்கள். நாள் முழுக்க உழைப்பவர்களுக்கு ஒரே பொழுதுபோக்கும் நம் தமிழ்சினிமாவும் அதில் நடித்து வரும் கலைஞர்களும்தான். இவர்களை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று துடிக்கும் இவர்கள், பெருமளவு பணத்தை கொட்டிக் கொடுத்து அவ்வப்போது இவர்களை அழைத்து விழாக்கள் நடத்தி சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் அது மெல்ல மெல்ல போட்டியாக வளர்ந்து தங்களுக்குள்ளேயே குழு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு பகைமை பாராட்டுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அங்கிருந்து வரும் அதிர்ச்சி தகவல்கள். அதைவிட பேரதிர்ச்சி, இந்த தமிழர்களின் பிரிவினையை பயன்படுத்தி, ராஜபக்சேவின் கைகூலிகள் பெருமளவு பணத்தை இது போன்ற விழாக்களுக்கு இறைக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தபடியே தங்கள் போராட்டத்தை வலுப்படுத்திவிடக் கூடாது என்று நினைக்கும் இலங்கை அரசு, சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து இதுபோன்ற விழாக்களை நடத்தி வருகிறது.

த்ரிஷா சென்றிருப்பதும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் நடத்துகிற கூட்டத்துக்குதான் என்று கனடாவில் இயங்கிவரும் சில இணையதளங்கள் கவலைப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து கனடா மற்றும் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் அழைப்பை ஏற்று செல்லும் நடிகர் நடிகைகள் விழாவை நடத்துகிறவர் யாருடைய ஆதரவாளர் என்பதை முன் கூட்டியே விசாரித்த பின்பு கிளம்புவதுதான் சரியாக இருக்கும் என்பது சில தமிழ் குழுக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

இதுவா எங்களுக்கு வேலை? யாரு பணம் கொடுத்தாலும் வருவோம் என்பதுதான் த்ரிஷா மட்டுமல்ல, மற்ற எல்லா நடிகர் நடிகைகளின் நிலைப்பாடு. அது டக்ளஸ் தேவானந்தா பணமாக இருந்தாலென்ன? இல்ல பருத்திவீரன் டக்ளஸ்சான கஞ்சா கருப்பின் பணமாக இருந்தால்தான் என்னவாம் அவர்களுக்கு?

Websites from Canada cast aspersion on Trisha’s visit?

Trisha is now in Canada at the request of a few Tamil organisations there. However some of the portals affiliated to Canada express their displeasure at Trisha’s visit. It was reported that the Tamil organisations which invited Trisha were supporters of Sri Lankan Minister Douqles Devananda. They have suggested that those artistes who visit for such functions should in advance find out who are the organisers and then give their confirmation for participation in such functions.

However not only Trisha  but whosoever be the actor or actress be cared who the organisers are, as they visit these countries for relaxation while at the same time earn handsome money for their participation.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எனக்கு ஜோடியா நடிக்காதீங்கன்னு நடிகைகளை தடுத்தாங்க… ஹீரோக்களை போட்டு தாக்கும் வடிவேலு!

சுமார் இரண்டரையாண்டு கால வன வாசத்தை முடித்துவிட்டு இன்று பிரஸ்சை மீட் பண்ணினார் வடிவேலு. அதே கலகலப்பு... அதே சுறுசுறுப்பு... வடிவேலு வாயை திறந்தாலே அந்த ஏரியா...

Close