ஆர்யாவுக்கு த்ரிஷா வச்ச செல்லப் பெயர்! அத வெளியில சொல்றதுக்கே கூச்சமா இருக்கே?

செல்லக்குட்டி, வெல்லக்கட்டி, ஜித்து, பித்து என்று ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமானவர்களை ஏதோவொரு பெயரில் அழைத்து, நாக்கிலேயே ‘நைஸ்’ பண்ணி வருகிறார்கள். நிஜப் பெயரைவிட இந்த நிக் நேம், ரொம்ப ரொம்ப திக் நேம் ஆகி பின்னாளில் அதுவே நிலைத்துப் போய் விடுவதும் உண்டு. ராணாவின் ரங்கோலி, வருண் மணியனின் வஞ்சர மீன், த்ரிஷாவுக்கும் அப்படியொரு நிக் நேம் இருக்கிறது. அதை சொல்லி அழைக்கிறவர்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியம் அது. ஆனால் த்ரிஷா ஆர்யாவை எப்படி அழைப்பார் என்பதை அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டை ரெகுலராக கவனிக்கும் சிலர் அறிந்து ஹய்யே ஆகியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆர்யா நடிக்கும் VSOP படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதை பார்த்து ஆர்யாவுக்கு வாழ்த்து சொன்ன த்ரிஷா, ஆல் தி பெஸ்ட் சொல்லியிருக்கிறார். அதோடு விட்டாரா? ஆர்யாவை அவர் எப்படி செல்லமாக அழைப்பாரோ, அந்த நிக் நேம் -ஐ உலகத்திற்கு அறிவித்துவிட்டார். இந்த படம் ஹிட்டாகணும். என் வாழ்த்துக்கள் குஞ்சுமணி என்று கூறியிருக்கிறார் அந்த ட்விட்டில்.

என்னது, குஞ்சுமணியா? போண்டா மணி தெரியும்… எம்ஜிஆரோட பாடிகார்டு குண்டுமணியை தெரியும். இந்த குஞ்சுமணி புதுசாவுல்ல இருக்கு?

இருவருமே மலையாளிகளாச்சே! அங்கே குஞ்சுமணி, குஞ்சுமோன், குஞ்சுமோள்களெல்லாம் சகஜமப்பா…. இதுக்குப் போயி ஊரைக்கூட்டிகிட்டு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாகுபலி – விமர்சனம்

மறுபடியும் கண்ணை மூடி யோசித்தால், இப்படியெல்லாம் கூட ஒரு படம் எடுத்துவிட முடியுமா? எஸ்.எஸ்.ராஜமவுலி என்பவர் சாதாரண மனுஷன்தானா? அல்லது ஏதேனும் விசேஷ ‘சிப்’புகளுடன் படைக்கப்பட்ட ஸ்பெஷல்...

Close