த்ரிஷா வளைப்பு! சிக்கினார் விஜய் சேதுபதி?
ஏஜ் ஏற ஏற ஏழெட்டு லார்ஜ் அடித்த மயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. எல்லா புகழும் யோகாவுக்கே என்று சொல்கிற அளவுக்கெல்லாம் அவர் அனுஷ்கா அல்ல. அப்படியிருந்தும் இந்த சிக் உடல்வாகு எப்படிம்மா… எப்படி? என்று அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் வியந்து கொண்டிருக்க, இன்னும் நாலைஞ்சு வருஷத்துக்கு ரிட்டையர் ஆகுற எண்ணமேயில்லை என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது அவரது வளைப்புகளும், திட்டங்களும்.
பல மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு, துவக்க நிலையிலேயே நிற்கிறது த்ரிஷா நடிக்கப் போகும் ஒரு படம். அதை ப்ரியம் பட இயக்குனர் பாண்டியன் இயக்குவதாகவும் பேச்சு. ஆனால் நடுவில் என்ன காரணத்தாலோ படம் நகரவேயில்லை. பல மாதங்களுக்கு பின் அப்படத்தின் மீது தனி கரிசனம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. எப்படி நயன்தாரா தன் படத்தை தானே வடிவமைக்கிறாரோ, அது போல இறங்கினால்தான் நிலைத்து நிற்க முடியும் என்று நினைத்திருக்கலாம். இந்த படத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் விஷயங்களை செய்து தரும் பொறுப்பை த்ரிஷாவே கையில் எடுத்துக் கொண்டாராம்.
அதன் விளைவுதான் இதுவும். அதாவது இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதியை ஒரு முக்கியமான ரோலில் நடிக்க அழைப்பது! த்ரிஷாவின் விருப்பம் அதுவாக இருந்தால், ஐயோ பாவம் விஜய் சேதுபதி என்ன செய்வார்? இவர் சுமாரான நடிகராக இருந்த காலத்திலேயே த்ரிஷா டாப் ஹீரோயின் அல்லவா? அவரே தேடி வந்து தன் படத்தில் கெஸ்ட் ரோல், அதுவும் நல்ல பெஸ்ட் ரோல் ஒண்ணு இருக்கு. எனக்காக பண்ணுங்க என்றால் தட்டிக்கழிக்கவா முடியும். ஆகட்டும்.. என்று கூறிவிட்டாராம்.
படத்தில் கொட்டாவி விடுகிற நேரத்தில் என்ட்ரியாகி, அதே கொட்டாவி முடிகிற நேரத்தில் காணாமல் போகிற ரோல் அல்லவாம் இது. அரை மணி நேரமாவது படத்தில் இருப்பார் என்கின்றன மேலதிக தகவல்கள்!
த்ரிஷா கைய வச்சா அது தேங்காவா உடையறது இல்ல… நீங்க கௌப்புங்க த்ரிஷா!