த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடுக் திடுக்!
ரஜினி, விஜய், அஜீத் மாதிரி ஹீரோக்களாக இருந்தால், நாலு பிளாப்புகளை கூட அடுத்தடுத்து தாங்குவார்கள். ஐந்தாவதாக ஒரு படம் ரிலீஸ் ஆகிற நேரத்திலும் ரசிகர்கள் தலைவா…. என்று பேய் கூச்சல் போட்டு படம் பார்க்க முண்டியடிப்பார்கள். ஆனால் படத்தையே சிங்கிள் ஆளா நின்று நான்தான் காப்பாற்றணும் என்று மார்தட்டும் ஹீரோயின்கள் யாருக்கும் அந்த கொடுப்பினை இல்லை. லேட்டஸ்ட் பேரதிர்ச்சி த்ரிஷா.
நயன்தாரா மட்டும்தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கணுமா? என்னால முடியாதா? என்று நம்பிக்கையோடு ஹீரோயின் சப்ஜெக்டுகளில் கவனம் செலுத்திய த்ரிஷா, நாயகி என்ற படத்தில் தன் கித்தாப்பை காட்டினார். ஐயோ பாவம்… படம் ஆந்திராவில் வெளியாகி, வெளியான ஒரு ஷோவோடு அவுட். இது த்ரிஷாவுக்கும் மட்டும் அதிர்ச்சியல்ல. அவரை வைத்து மோகினி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்த டைரக்டர் மாதேஷுக்கும்தான். பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர்தான் இந்த படத்திற்கும் தயாரிப்பாளர். நாயகியின் ரிசல்ட்டை கண்கூடாக பார்த்த அவர், உடனே மோகினி படத்தை மூட்டை கட்டி பரண்ல போட்ருங்க என்று கூறிவிட்டாராம்.
சுமார் இருபது நாட்கள் லண்டனில் படமாக்கப்பட்ட மோகினி, இந்த நிமிஷத்து நிலவரப்படி டிராப்! மாதேஷ் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிப்பதுதான் அந்த தயாரிப்பாளரின் நோக்கம். நடுவில் சின்னதா ஒரு படம் பண்ணலாமே என்றுதான் இந்த மோகினிக்குள் இறங்கினார்களாம். எப்படியோ… சகுனமே சரியில்லை. படத்தை மூடி வச்சுருங்க என்று அவர் கேட்டுக் கொண்டதால் எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டுவிட்டாராம் மாதேஷ்.
படம் டிராப் என்ற தகவலை கேட்டு அப்செட் ஆன த்ரிஷா, மனசை தேற்றிக் கொள்ள வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார்.
கெட்ட நேரம் வந்தால், சூட்கேஸ்லேர்ந்து கூட சுனாமி வரும் போலிருக்கு!