போயும் போயும் இப்படியா சிக்குறது? த்ரிஷாவை அலற வைத்த செய்தி

எவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க…, மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல…? என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால் கிடுகிடுக்க வைக்கும் அவருக்கு இப்போது வயசு என்ன? கவர்மென்ட் ஊழியராக இருந்தால் பென்ஷன் வாங்குகிற வயசு. ஆனால் இப்பவும் இளம் சிட்டுகளுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுவும் சின்னஞ்சிறுசாக பார்த்து தனக்கு ஜோடியாக்கிக் கொள்வதில் அவரை மிஞ்ச ஆளில்லை.

அவருக்கும் ஒரு ஆசை இருக்குமல்லவா? திடீரென த்ரிஷாவை தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டுக் கொண்டார். முடியாது என்று மறுத்தால் ஆந்திராவுக்கு வரும் ஃபிளைட்டுகளை அந்தரத்திலேயே நிறுத்தி கொளுத்துகிற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் பலம் அதிகமிருப்பதால், யோசிக்கக் கூட மனசுக்கு இடம் கொடுக்கவில்லை த்ரிஷா. ஒன்றரை கோடி சம்பளம் என்று அந்த நேரத்திலும் ஒரு கொக்கியை போட்டு இழுத்துவிட்டார். எல்லாம் ரெடி. படப்பிடிப்பும் ஆரம்பம் ஆகிவிட்டது.

இந்த நேரத்தில்தான் அந்த தடியடியுடன் கூடிய 144 வந்து த்ரிஷாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. என்னவாம்? இந்த படத்தில் ஒரு லிப் கிஸ் இருக்கிறதாம். பாலகிருஷ்ணா தன் உதடுகளால் த்ரிஷாவின் உதட்டை கவ்வி இழுப்பதை போல அந்த காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் கூற, பேசக்கூட உதடுகள் வராமல் உதறல் எடுத்துக் கிடக்கிறார் த்ரிஷா.

செஞ்சு தொலைய வேண்டியதுதான். இதுக்கெல்லாம் போய் மோடிகிட்டவா மனு கொடுக்க முடியும்?

1 Comment
  1. dinesh says

    ur way of writing is very funny..please continue to write like this..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மஞ்சப்பை- விமர்சனம்

மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே...

Close