அந்த கிசுகிசு உண்மைதான்! கொளுத்திப்போட்ட ஹீரோ

கொளுத்திப்போட்டு குளிர் காய்வதில் சிம்புவுக்கு அடுத்த இடத்திலிருப்பவர் ராணாதான் போலிருக்கிறது. யாரிந்த ராணா என்பதற்கெல்லாம் பெரிய கதை திரைக்கதை வசனம் எழுத தேவையில்லை. ஏனென்றால் த்ரிஷாவின் பெயர் ஒலிக்கிற இடத்திலெல்லாம் ராணாவின் பெயரும் ஒலிக்கும். எனக்கும் அவருக்கும் ஜஸ்ட் பிரண்ட்ஷிப்புதான் என்று த்ரிஷா தப்பித்து வந்தாலும், அந்த கிசுகிசுவை ராணா அடிக்கடி சூடுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு இருவரும் கைகோர்த்தபடியே வந்தது கூட அப்படியொரு சூடான முன்னேற்பாடுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம். அண்மையில் நட்சத்திரங்கள் திரண்ட ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேடையேறிய ராணாவிடம், உங்களுக்கு தமிழ் பேச வருமா என்று கேட்டார் தொகுப்பாளர். ம்… நல்லா வருமே என்றார் ராணா. சென்னையில எல்லா இடமும் தெரியுமா என்று கேட்டார் தொகுப்பாளர். ம் நல்லா தெரியுமே என்று கூறிய ராணா, அதற்கப்புறம் அடித்தது வெறும் ஜோக் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.

சென்னையில என்னை எங்கு இறக்கிவிட்டாலும், கரெக்டா த்ரிஷா வீட்டுக்கு போயிருவேன் என்றார் ராணா. நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை அவங்களே ஒத்துக்கும்போது ஒரு சந்தோஷம் வருமில்ல…? அது எப்படியிருக்கும் என்பதை ஆடியன்ஸ்சோட கைதட்டலை வச்சுதான் அன்று தீர்மானித்தது பிரஸ்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா படத்திலிருந்து மாறுகிறார் யுவன்!

எங்கு போனாலும் யுவன்சங்கர்ராஜாவை துரத்தும் ஒரே கேள்வி இதுதான். ‘இஸ்லாமுக்கு மாறிட்டீங்க, இன்னும் பழைய பெயர்தான் டைட்டிலில் வருது... ஏன்? ’ சிலர் அவரது ட்விட்டருக்கே வந்து...

Close