போய்தான் ஆகணும்… போகவே கூடாது… வில்லங்க சண்டையில் வீர சிவாஜி
தகராறு படத்திற்கு பிறகு கணேஷ் விநாயக் இயக்கி வரும் படம் வீர சிவாஜி. விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஷாம்லி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காகதான் இப்போது உண்ணாவிரதம் நடத்திக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர். அடிப்படையில் சிறந்த போட்டோகிராபரான அவருக்கு லொக்கேஷன்களின் மீது ஒரு கண் இருக்குமல்லவா? அப்படியொரு கண்ணை இன்டர்நெட்டில் சிக்கிய ஒரு இடத்தின் மீது வைத்துவிட்டாராம். கொடுமை என்னவென்றால் அந்த இடம் கும்மிடிப்பூண்டி தாண்டி… இந்தா கூப்பிடு தொலைவில் இருக்கிற அமெரிக்காவில் சிக்கிக் கொண்டது.
ஷாம்லியையும், விக்ரம் பிரபுவையும் அப்படியே அந்த லொக்கேஷன்ல ஓட விட்டு எடுக்குறோம். அம்புட்டு பேரையும் அசர வைக்கிறோம் என்று இவர் ஃபீல் பண்ண, தம்பி… என்னைய ஓட விட்றாதப்பா என்கிறாராம் தயாரிப்பாளர். ஏன்?
பொதுவாகவே அமெரிக்காவுக்கு போய் படம் எடுப்பதென்றால் ஆயிரம் பார்மாலிடிஸ் இருக்கிறது. “இது நொள்ளை, அது சொத்தை, நீ யாருன்னு நான் எப்படி தெரிஞ்சுக்குறது? நீ தீவிரவாதியா இருந்தா நான் என்ன பண்ணுறது?” என்கிற மாதிரியே கேள்வி கேட்பார்கள். “எல்லாரையும் கூட்டிட்டு போய் எங்காவது எக்குதப்பா ஆகிட்டா பிரச்சனைப்பா. வேற ஏதாவது பிரச்சனையில்லாத நாடுன்னா சொல்லு. நாளைக்கே கிளம்பலாம்” என்கிறாராம் தயாரிப்பாளர்.
வீர சிவாஜியே குதிரையை விட்டு இறங்கி வந்து பஞ்சாயத்து பண்ணினால்தான் பிரச்சனை முடிவுக்கு வரும்போல தெரிகிறது.