இது கழட்டிவிடும் காலம்! சிக்கலில் பீப் பாய்ஸ்?

ஒரு ஹிட் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவ்வளவு கெட்ட காலத்திலும், அவர் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகளில் இருந்தார் என்கிறது சில உர்ஜிதப்படுத்தாத தகவல்கள். போலீஸ் தேடாத போது அவர் ஏன் வீட்டுக்குள்ளோ, அல்லது வேறெங்காவதோ முடங்கிக் கிடக்கணும்? அதனால்தான் பட வேலைகளை பார்த்து வந்தார் போலும். நடக்கட்டும்… மேட்டர் அதுவல்ல.

சிம்பு நயன்தாரா இணைந்து நடித்து பசங்க பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படத்தை இந்த பொங்கலுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தார்கள். இந்த பீப் விவகாரம் வந்து மொத்த வேலையையும் கொடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டது. இந்த இழுபறி நேரத்தில், நைசாக ஒரு நழுவலும் நடந்தது. இது நம்ம ஆளு படத்தை ரிலீஸ் செய்யும் வேலையை தேனான்டாள் பிலிம்ஸ் ஏற்றுக் கொண்டிருந்தது. பீப் தந்த உளைச்சலால், அவர்களும் பின் வாங்கிவிட்டார்களாம். “யார் போனா என்ன? என் தன்னம்பிக்கை இருக்கு. பார்த்துக்குறேன்” என்று கூறி வருகிறார் டி.ஆர். அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார் அவர். இந்த படத்தின் டிசைன் வேலைகளை தன் மேற்பார்வையில்தான் கவனித்து வந்தார் பாண்டிராஜ். இப்போது அதையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாராம் டி.ஆர். முதல் வேலையாக ‘சிம்பு WIN இது நம்ம ஆளு’ என்று டிசைன் செய்து வெளியிட, நொந்தே போய்விட்டார் பாண்டி. ஏன்?

இப்படியெல்லாம் உப்புமா இயக்குனர்கள்தான் யோசிப்பார்கள். அதனால்தான் இந்த ஷாக்.

சிம்பு மேட்டர் அப்படியென்றால் அனிருத் விவகாரம் இன்னும் டெரர். மூன்று படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவர். வீடே புரட்டிப் போடுகிற அளவுக்கு வெள்ளத்தின் ஸ்பீட் இருந்தாலும், அனிருத்தை பிடித்த பிடி விலகாமலிருந்த தனுஷும் அவரை கழற்றி விட்டுவிட்டார். அவர் நடிக்கும் கொடி படத்திற்கு முதலில் அனிருத் மியூசிக் டைரக்டராக நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது அவரை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

ஓட்டை பைதான் ஒழுகும்! என்ன செய்ய?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
செம்பரம்பாக்கம் உடைஞ்சாலும்…! பார்த்திபனின் நம்பிக்கை ப்ளஸ் நையாண்டி பீப்!

ஊரெல்லாம் மண்டையிலிருந்து சிந்தித்தால் பார்த்திபன், மூக்கிலிருந்தும், நகத்திலிருந்தும் கூட சிந்திப்பார். ஏனென்றால் டிசைன் அப்படி! உலகம் புதுமைப்பித்தன் என்ற அடையாளம் கொடுத்து அவரை அழைப்பதாலேயோ என்னவோ, எல்லாவற்றிலும்...

Close