சிம்பு தேவன் வயிற்றில் ‘புலி’ கரைக்கும் விஜய்! இந்த டைட்டிலும் வேணாமாம்?
ஆமாங்க… தலைப்பு புலிதான் என்று சிம்புதேவன் அறிவித்து சில தினங்கள் கூட முழுசாக முடியவில்லை. அதற்குள் ‘இந்த தலைப்பு உங்களுக்கு செட் ஆகுமான்னு யோசிச்சுக்குங்க’ என்று விஜய்யின் மனசில் வில்லங்கத்தை விதைத்துவிட்டார்களாம் சிலர்.
பொதுவாகவே விஜய் எந்த படத்தில் நடித்தாலும், ரிலீஸ் நேரத்தில் கொம்பு தூக்கிக் கொண்டு நிற்கிறது ஒரு கோஷ்டி. ‘எந்த பக்கத்திலிருந்து எவன் கேஸ் போடுவான்னே தெரியல. இருந்தாலும் சமாளிப்போம்’ என்று ரிலீசுக்கு ரெண்டு மாசத்திற்கு முன்பிருந்தே தயாராகிவிடுவார் அவரும். ‘அப்படியொரு கில்லி தாண்டும் பொசிஷனில் நீங்க இருக்கும் போது இப்படியொரு சர்ச்சைக்குரிய தலைப்பு தேவைதானா? அது தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி விடாதா?’ என்றெல்லாம் அடுக்கடுக்காக சந்தேகம் கிளப்பினார்களாம் அவர்கள். ஆமாம்ல…? அதுவும் சரிதான் என்ற முடிவுக்கு வந்த விஜய், ‘இந்த தலைப்பை மாத்திட்டா என்ன?’ என்கிறாராம் இப்போது.
விஜய் படங்கள் என்றாலே அவருக்கு குழந்தைகள் சப்போர்ட் அதிகம். இந்த படமும் கிட்டதட்ட குழந்தைகளையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை. எனவே ‘தலைப்பை அவர்களும் விரும்புகிற மாதிரி வச்சுடலாமே’ என்கிறாராம். மீண்டும் பரிசீலனை நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் புலி மாற்றப்படலாம்!