போட்ட ரெட் போட்டதுதான்! தயாரிப்பாளர் சங்கம் உறுதி!

ஒரு முக்கியமான சேனலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்கு, கணக்கு வழக்கில்லாமல் நீளும் போலிருக்கிறது. சேனலும் சும்மாயில்லை. ‘எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்க நீங்கள் யார்?’ என்று கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து கடும் கோபத்துடன் கூடிய தயாரிப்பாளர் சங்கம், எழுத்துபூர்வமாக யாரையும் தடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

இனிமேல் எந்த நடிகர் நடிகைகளும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சினிமா சார்ந்த தொழில் நுட்ப கலைஞர்களும் சம்பந்தப்பட்ட சேனல் நிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடாது. ஜட்ஜ் ஆக இருந்து நிகழ்ச்சிகளுக்கு மார்க் போடக் கூடாது. படத்தின் பாடல் கிளிப்பிங்ஸ், படக்காட்சிகள், உள்ளிட்ட எதையும் தரக் கூடாது. முக்கியமாக அந்த சேனலுக்கு படத்தையே விற்க கூடாது என்கிற வரைக்கும் தங்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார்களாம்.

இறுதியாக நாளையே நடிகர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்க தலைமையை அழைத்து மேற்படி கட்டுப்பாடுகளை விதிக்க சொல்லி கேட்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கெல்லாம் சம்மதிக்கிற மன நிலையில்தான் இருக்கிறதாம் நடிகர் சங்கமும், மற்ற சங்கங்களும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அமலுக்கு வந்தது தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட்! அவதியில் சேனல்? படப்பிடிப்புகள் ரத்து?

அந்த மூன்றெழுத்து சேனலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் செம டோஸ் விழுந்தது. பணத்தை அள்றது முழுக்க எங்க துறை ஆட்களை வைத்துக் கொண்டு. ஆனால் சேனலுக்கு...

Close