அமலாபால் கொழுந்தன் ஆவியோடு பேசுவாராம்?

நடிகர் உதயாவுக்கு கண்டிப்பாக அறிமுகம் தேவைதான்! காலமும் அது தரும் ஹிட்டுகளும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால், உதயா நடித்த முந்தைய படங்களை பற்றி இளைய தலைமுறை யோசிக்கப்போவதில்லை. இருந்தாலும், முதலைக்கு ஏது மூட்டு வலி? சினிமாவில் ஒரு வல்லிய இடத்தை பிடிப்பதற்காக ஓடிக் கொண்டேயிருக்கிறார் உதயா. பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய். இவரது தம்பி. இவரது அப்பா ஏ.எல்.அழகப்பன் பிரபல தயாரிப்பாளர். இவ்வளவு சொல்லியாச்… அமலாபால் இவருக்கு என்ன உறவு என்று தனியாக வேறு சொல்லணுமா?

சரி, இப்போது எதற்கு உதயா புராணம்? இருக்கிறதே… அவரது பிறந்த நாளான ஏப்ரல் 21 ந் தேதியான இன்று தனது உடலை மோகன் பவுன்டேஷன் என்ற மருத்துவ உதவி அமைப்புக்கு தானமாக கொடுத்துவிட்டார். சென்னை அரசு பொதுமருத்துவமனையோடு இணைந்து இயங்கி வருகிறது இந்த அமைப்பு. வருடம் முழுக்க கிட்னி நோயால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. கிட்னிக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இதயம், கண், மற்றும் இன்னபிற இன்றியமையாத உறுப்புகளை தானமாக கொடுத்தால் அவர்கள்தான் கடவுள் என்றார்கள் இந்த அமைப்பின் சார்பாக நம்மிடம் பேசியவர்கள். ஹெல்ப் லைன் எண்- 1800 419 3737

சரி… மீண்டும் உதயா விஷயத்திற்கு வருவோம். அவர் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘ஆவி குமார்’ படம் மே இறுதியில் திரைக்கு வருகிறது. அது வெளிவருவதற்குள்ளேயே ‘உத்தரவு மஹாராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் உதயா. ‘பேய் ஆவிகளுடன் பேசுகிற வழக்கமுள்ள ஆவி அமுதாவின் கேரக்டரில்தான் நான் நடிச்சிருக்கேன். அந்த படம் ஃபுல் காமெடி படம். அடுத்து நான் நடிக்கப் போகும் ‘உத்தரவு மஹாராஜா’ படமும் காமெடிதான்’ என்கிறார் உதயா.

ஏ.எல்.விஜய் வீட்டு ரேஷன் கார்டில் உதயாங்கிற ஒரு நபருக்கு மட்டும் சர்க்கரை இல்லேன்னா எப்படி? ஓடு முதலையே ஓடு…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அய்யோ போச்சே… அஞ்சலி அதிர்ச்சி

காஞ்சனா 2 ன் கலெக்ஷன் எப்படி? ஒரு வரியில் சொல்வதென்றால், சும்மா பிரிச்சு மேஞ்சுருச்சு! தியேட்டர்களில் டிக்கெட் இல்லேன்னாலும் பரவாயில்ல. நின்னுகிட்டு பார்க்கிறோம் என்கிறார்களாம் ரசிகர்கள். சொன்ன...

Close